• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

ரிஷப ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்:

பெயர்ச்சி காலம்:
ரிஷப ராசிக்கு சனிபகவான் 26-01-2017 அன்று இரவு முதல் ஏழாம் வீட்டில் இருந்து எட்டாம் வீடான தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்.

பலன்கள்:
உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டக சனியாக இருந்து பிரச்சனைகள் தந்த சனிபகவான் வரும் 26-01-2017 முதல் எட்டாம் வீட்டில் அமர்வதால் பிரச்சனைகள் தொடரும். வரும் 2 ½ வருடங்கள் அஷ்டம சனியாக, சனிபகவான் இருந்து நன்மைகளை குறைப்பார். எட்டாம் வீட்டில் உள்ள சனிபகவான் காரணமாக எதிர்மறை எண்ணங்கள், பிரச்சனைகள், வலி வேதனைகள், கடன்கள், வீண் வழக்குகள் போன்றவை வந்து சேரும். வேலைகாரர்கள் மூலம் தொல்லைகள் ஏற்படும். குருவின் வீடான தனுசு ராசியில் சனிபகவான் அமர்வதால் வெளி உலகில் உங்கள் மதிப்பு, கெளரவம், போன்றவை குறையும். சிலருக்கு திருமண பேச்சுகள், குழந்தை பாக்கியம் போன்றவை தடைபடும்.

பொதுவாக நீங்கள் மற்றவரிடம் முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தவும். பத்து, பதினோராம் வீட்டிற்கு உரிய சனிபகவான் எட்டாம் வீட்டில் அமர்வதால் தொழிலில் கவனம் தேவை, எந்த முடிவையும் பல முறை யோசித்து எடுக்கவும். வேலையில் உள்ளவர்கள் அதிக கவனத்துடன் வேலை செய்யவும். உயர் அதிகாரிகளை மதித்து நடக்கவும். பதவி உயர்வில் பல தடைகள் ஏற்படும். வரும் 2 ½ வருடங்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய காலம் ஆகும்.

பொருளாதாரம்:-
சனிபகவான் பத்தாம் வீட்டை பார்ப்பதால் வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு வேலையில் வேலைபளு அதிகரிக்கும், பணிமாற்றம் கிடைக்கும். சனிபகவான் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் எதிர்பாராத தனவரவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

மனமகிழ்ச்சி:-
சனிபகவான் 5ம் வீட்டை பார்ப்பதால் சிலருக்கு குழந்தை பாக்கியத்தில் தடை ஏற்பட்டு, பின் குழந்தை பாக்கியம் அமையும். காதல் விஷயங்களில் அவ்வபோது பிரச்சனைகள் ஏற்படும். கணவன் மனைவி அன்பு, ஒற்றுமை சற்று சுமாராகவே இருக்கும். பொதுவாக மனமகிழ்ச்சி குறைவாக காணப்படும்.

பரிகாரம்:-
திருநள்ளாறு சென்று நீராடி வரவும். சனிக்கிழமை தோறும் காக்கைக்கு மதிய உணவு வைத்து பின்பு உண்ணவும்.


2017 Taurus Saturn Transit Predictions:
As the saturn is in 7th place, you are facing problems. As the Saturn is entering 8th place by 26-1-2017, the problem continues. The next 2 ½ years is the Ashtama Saturn. So, the Saturn will decrease your benefits. As the Saturn is in the 8th place, you will get negative thoughts, problems, troubles, pain, loan/ debts, unnecessary court cases. You will get troubles and problems from your workers/servants. As the Saturn is in Sagittarius zodiac which is the house of the Jupiter, your name, value, respect, fame will get decreased. You will face problems in getting married and giving child birth.

In general, try to decrease your short temper. Students should concentrate more on their studies. As the Saturn is the sign lord of 10th and 11th house/places. Is entering 8th place attention and care are needed and think twice before you take any decision. Working people should take care of their job and respect your senior officers. There will be many problems in your promotion. You should pay attention and care for the next 2 ½ years.

Financial status: As the Saturn has eye contact with 10th house/place unemployed people will get employed. Some will have more work load in their job, some will get transfers. As the Saturn has eye contact with 2nd house/place chances are there for you to get good income.

Personal life: As the Saturn has eye contact with 5th place/house some will get trouble in giving child birth in initial stages. There will be problem in your love occasionally. Love and unity between husband and wife will be normal. In general, happiness will decrease.

Remedy: Visit Thirunallaru (the Saturn temple) and take bath in the pond. Feed crow in the afternoon on every Saturday before you take your lunch.

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil