• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

கடக ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்:

பெயர்ச்சி காலம்:
கடக ராசிக்கு சனிபகவான் 26-01-2017 அன்று இரவு முதல் ஐந்தாம் வீட்டில் இருந்து ஆறாம் வீடான தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்.

பலன்கள்:
உங்கள் ராசிக்கு சனிபகவான் ஐந்தாம் வீட்டில் இருந்து சுமாரான பலன்களை தந்த சனிபகவான் வரும் 26-01-2017 முதல் ஆறாம் வீட்டில் அமர்ந்து நன்மைகளை தருவார். ரண குண சனியாக வரும் 2 ½ வருடங்கள் சனிபகவான் தனுசு ராசியில் உள்ளதால் எதிர்பார்த்த நன்மைகள் யாவும் கிடைக்கும். வேலை இல்லாதவர்கள் மிகவும் சிறப்பான வேலையை பெறும் காலம். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகள் நன்மையை அடையும் காலம். சகோதர சகோதரிகள் வழியில் நன்மைகள் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும்.

வீடு, இடம், மனை, வாகனம் போன்றவற்றால் நன்மை ஏற்படும். வேலைக்காரர்களால் நன்மை ஏற்படும். வங்கி கடன்கள் எளிதாக கிடைக்கும். சிலருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும், அவர்களது உடல் நிலையில் கவனம் தேவை. உற்பத்தி சார்ந்த தொழில்கள், உணவு, உடை சார்ந்த தொழில்களில் லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு குறைவான வாய்ப்புகள் கிடைக்கும். பொதுவாக இந்த 2 ½ வருடங்கள் பொருளாதார வாழ்க்கைக்கு சிறப்பாக இருக்கும், இருப்பினும் வீண் விவகாரங்களில் தலையிட கூடாது.

பொருளாதாரம்:-
வேலையில் உள்ளவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறுவார்கள். சுயதொழில் செய்பவர்கள் ஓரளவு லாபம் பெறுவார்கள். முதலீடு செய்வதில் கவனம் தேவை. உற்பத்தி பொருட்கள், ஆடை, ஆபரண தொழில்கள் சிறப்பாகவும், கமிஷன் சார்ந்த தொழில்கள் சுமாராகவும் இருக்கும்.

மனமகிழ்ச்சி:-
இனி வரும் காலங்களில் மனமகிழ்ச்சி, பொழுது போக்கு போன்ற விஷயங்கள் குறைவாக கிடைக்கும். சிலருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கணவன் மனைவி அன்பு, ஒற்றுமை சுமாராக இருக்கும். சிலருக்கு வேலை காரணமாக பிரிவு ஏற்பட வாய்ப்புண்டு.

பரிகாரம்:-
சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வணங்கி வர நன்மைகள் உண்டு.


2017 Cancer Saturn Transit Predictions:
As the Saturn is entering 7th place from 6th place by 26-1-2017 you will get less benefits. As the Saturn is in Sagittarius place 7th place as “kanda Saturn“ benefits may decrease. As the Jupiter is entering the Jupiter place, your interest in devotion will increase. Childless couple will get child birth. Blocked and delayed marriages will get fixed. Your health issues will get rectified and become healthier. Your debt/loan problem will get decrease. Unemployed people will get employed (lower level job than your expectation)

You will get chances to buy a home, property/plot, vehicle, etc. Attention and care are needed with strangers. Motif people will get benefits. Women will get happiness. Unity and love between husband and wife will get increased. You will get happiness through your children. You will get happiness from your brothers and sister side. Some may get more auspicious expense. For the next 2 ½ years, the Saturn will give normal benefits.

Financial status: Business people will get benefits. Working people will get normal benefits. Respect your higher officials. People in commission, arts, public communication oriented job will get benefits. You will get necessary income.

Personal life: Women will be happier. You will get happiness through your children, husband/wife. Love matters will end in marriage. This is the duration in which personal life will be better than financial status.

Remedy: Worship lord Ganesha on Saturdays (morning) to get benefits

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil