• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

சிம்மம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்:

பெயர்ச்சி காலம்:
சிம்ம ராசிக்கு சனிபகவான் 26-01-2017 அன்று இரவு முதல் நான்காம் வீட்டில் இருந்து ஐந்தாம் வீடான தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்.

பலன்கள்:
உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் இருந்து சுமாரான நன்மைகளை தந்த சனிபகவான் வரும் 26-01-2017 அன்று முதல் ஐந்தாம் வீடான தனுசு ராசிக்கு செல்வதால் நன்மைகள் ஏற்படும். அர்த்தாஷ்டம சனியாக இருந்து பிரச்சனைகளை தந்த சனிபகவான் 5ம் வீடான மனமகிழ்ச்சி ஸ்தானத்திற்கு செல்வதால் தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சியை தரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொழுது போக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியில் உங்கள் மதிப்பு, புகழ், கெளரவம் போன்றவை சிறப்படையும். கலைத்துறையில் உள்ளவர்கள் நன்மை அடைவார்கள்.

சகோதர சகோதரிகள் வழியில் நன்மைகள் ஏற்படும். கமிஷன் சார்ந்த தொழில்களில் லாபம் ஏற்படும். வீண் விவகாரங்களில் தலையிடல் கூடாது. வழக்குகளில் சமரசமாக அல்லது விட்டுகொடுத்து செல்லும் வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு பொருளாதார உயர்வு சற்று குறையும். மாணவர்கள் அதிக அக்கறையுடன் படிக்கவும். உங்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும், இயற்கையான உணவுகளை எடுத்து கொள்ளவும். சிலருக்கு அதிக உழைப்பும், குறைவான வருமானமும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இனிவரும் 2 ½ வருடங்கள் உங்களுக்கு அக வாழ்க்கைக்கு மிகவும் சிறப்பாகவும், புற வாழ்க்கைக்கு சுமாராகவும் இருக்கும்.

பொருளாதாரம்:-
கமிஷன் துறையில் உள்ளவர்கள், சுயதொழில் புரிபவர்கள், சினிமா துறையில் உள்ளவர்கள் நன்மை பெறுவார்கள். மாத சம்பளம் வாங்குபவர்கள் மிதமான நன்மைகளை பெறுவார்கள். சுயதொழில் புரிபவர்கள் அதிக முதலீடு செய்ய வேண்டாம். கடன்களை அடைக்கும் காலமாக இருக்கும். மிதமான பொருளாதார உயர்வு ஏற்படும்.

மனமகிழ்ச்சி:-
மனமகிழ்ச்சி சிறப்படையும் காலகட்டமாகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேரும் காலம். கணவன் மனைவி அன்பு, ஒற்றுமை அதிகரிக்கும். காதல் விஷயங்கள் திருமணத்தில் முடியும். குழந்தைகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். பொதுவாக அகவாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்:-
திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்கி வர நன்மைகள் கிடைக்கும்.


2017 Leo Saturn Transit Predictions:
Saturn Transit Period
For Leo, the Saturn transit on 26-01-2017 from Fourth place to Fifth place (Sagittarius)

Result:
As the Saturn is entering 7th place from 6th place by 26-1-2017 you will get less benefits. As the Saturn is in Sagittarius place 7th place as “kanda Saturn“ benefits may decrease. As the Jupiter is entering the Jupiter place, your interest in devotion will increase. Childless couple will get child birth. Blocked and delayed marriages will get fixed. Your health issues will get rectified and become healthier. Your debt/loan problem will get decrease. Unemployed people will get employed (lower level job than your expectation)

You will get chances to buy a home, property/plot, vehicle, etc. Attention and care are needed with strangers. Motif people will get benefits. Women will get happiness. Unity and love between husband and wife will get increased. You will get happiness through your children. You will get happiness from your brothers and sister side. Some may get more auspicious expense. For the next 2 ½ years, the Saturn will give normal benefits.

Financial status: Business people will get benefits. Working people will get normal benefits. Respect your higher officials. People in commission, arts, public communication oriented job will get benefits. You will get necessary income.

Personal life: Women will be happier. You will get happiness through your children, husband/wife. Love matters will end in marriage. This is the duration in which personal life will be better than financial status.

Remedy: Worship lord Ganesha on Saturdays (morning) to get benefits

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil