• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

கன்னி ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்:

பெயர்ச்சி காலம்:
கன்னி ராசிக்கு சனிபகவான் 26-01-2017 அன்று இரவு முதல் மூன்றாம் வீட்டில் இருந்து நான்காம் வீடான தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்.

பலன்கள்:
உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து ஓரளவு நன்மைகளை தந்த சனிபகவான் வரும் 26-01-2017 அன்று முதல் நான்காம் வீடான தனுசு ராசியில் செல்வதால் நன்மைகள் சற்று குறையும். நான்காம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியாக இனி வரும் 2 ½ வருடங்கள் சனிபகவான் உங்களுக்கு பலன்களை வழங்குவார். நான்காம் வீட்டில் உள்ள சனி காரணமாக குழந்தை பாக்கியம் தடைபடும். சிலருக்கு குழந்தைகளால் பிரச்சனைகள் ஏற்படும். கணவன் மனைவி அன்பு, குடும்ப ஒற்றுமை, மனமகிழ்ச்சி போன்றவற்றில் பிரச்சனைகள் ஏற்படும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை. காதல் விஷயங்களில் மனமகிழ்ச்சி குறையும்.

குழப்பங்கள், அலைச்சல்கள், போன்றவை குறைந்து நிலையான வேலை கிடைக்கும். உற்பத்தி தொழில் செய்பவர்கள் நன்மைகளை பெறுவார்கள். கமிஷன் துறையில் உள்ளவர்கள் குறைவான வேலை வாய்ப்புகளை பெறுவார்கள். நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உங்களுக்கு உள்ளது. வங்கி கடன்கள் எளிதாக கிடைக்கும். தனவரவு ஓரளவு சிறப்பாக அமையும் அதே சமயம் வரவிற்கு ஏற்ற செலவுகளும் இருக்கும். இனி வரும் 2 ½ ஆண்டுகள் குறைந்த மனமகிழ்ச்சியுடன், அதிக உழைப்புடன் இருக்க வேண்டி வரும்.

பொருளாதாரம்:-
சனிபகவான் பொருளாதார உயர்வை தருவார்.அதிக உழைப்புடன் கூடிய தொழில்கள் சிறப்படையும். சொந்த தொழிலில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். கலைத்துறையில் உள்ளவர்கள் மிதமான வாய்ப்புகளை பெறுவார்கள். சனிபகவான் 10ம் வீட்டை பார்ப்பதால் தொழிலில் லாபம் ஏற்படும்.

மனமகிழ்ச்சி:-
சனிபகவான் 6,10ம் வீட்டை பார்ப்பதால் வேலைபளு அதிகரிக்கும். பொழுது போக்கு விஷயங்களில் நாட்டம் குறையும். கணவன் மனைவி அன்பு, மனமகிழ்ச்சி போன்றவை பாதிக்கும். இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு குறைவான மனமகிழ்ச்சியை தரும்.

பரிகாரம்:-
சனி பகவானின் நன்மையை பெற திருநள்ளாறு சென்று நீராடி வரவும்.


2017 Virgo Saturn Transit Predictions:
Saturn Transit Period
As the Saturn is in 3rd place, you have got some benefits. As the Saturn is entering 4th place by 26-1-2017, benefit decreases. As the Saturn enters 4th place, the next 2 ½ years will be arthaashtama Saturn for you. There will be problem in child birth. Some will face problems through their children. There will be problems between husband and wife in unity, happiness and love. You will get love and support from your parents. Attention and care are needed in your mother’s health. Happiness in love matter will decrease.

Confusions and unnecessary travel will decrease and you will get permanent job. Commission oriented working people will get less opportunity. You will get benefits through your friends. You have chances to buy house, plot, vehicle etc. You will get bank loans easily. You will get good income. But you will have more expense that matches your income. For the next 2 ½ years, your life will be in happiness and you will have to work hard.

Finance status: Saturn will give growth in your financial status. Hard working business will be beneficial. Do not invest more in your business. Motifs will get normal opportunities. As the Saturn has eye contact with the 10th house, you will get profit in your business.

Personal life: As the Saturn has eye contact with 6th and 10th house/place, workload will increase. Interest in entertainment will decrease. Love, unity and happiness between husband and wife will decrease. This Saturn transition will give you less happiness.

Remedy: Visit Thirunallaru (the Saturn temple) & take bath in pond to get benefits.

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil