• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

துலாம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்:

பெயர்ச்சி காலம்:
துலாம் ராசிக்கு சனிபகவான் 26-01-2017 அன்று இரவு முதல் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீடான தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்.

பலன்கள்:
உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் குடும்ப சனியாக இருந்த சனிபகவான் மூன்றாம் வீட்டில் வரும் 26-01-2017 முதல் சஞ்சரிப்பதால் ஓரளவு நன்மைகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு ஓரளவு சிறப்பான வேலை கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு விரும்பிய பணிமாற்றம் இடமாற்றம் கிடைக்கும். கணிப்பொறி, தகவல் தொடர்பு துறையில் உள்ளவர்களுக்கு நன்மைகள் விளையும். கணவன் மனைவி வழியில் அலைச்சல் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஏற்படும். வீடு, மனை, வாகனம் போன்றவற்றை விற்பனை செய்ய ஏற்ற காலம். மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதோ ஜாமீன் கையெழுத்து இடுவதோ தவிர்பது நல்லது. கடன் பிரச்சனைகள் உங்களுக்கு குறையும். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவி அன்பு, குடும்ப ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். தெய்வ அனுகிரகம் உங்களுக்கு கிடைக்கும். சுபசெலவுகள் உங்களுக்கு ஏற்படும். குழந்தைகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். உங்கள் முயற்சிக்கு ஏற்ற நன்மைகளை பெறுவிர்கள். சிலருக்கு உடன் பிறப்புகளால் அலைச்சலும் குழப்பங்களும் ஏற்படும். சிறுதொழில்கள், கமிஷன் சார்ந்த தொழில்கள், விளம்பர தொழில்கள் போன்றவற்றில் லாபம் ஏற்படும். கலைத்துறையில் உள்ளவர்கள் சிறப்பான வாய்ப்புகளை பெறுவார்கள்.

பொருளாதாரம்:-
உங்களுக்கு மிதமான பொருளாதார உயர்வு ஏற்படும். தேவைக்கெற்ற தனவரவு கிடைக்கும். சிலருக்கு தேவையற்ற அலைச்சலும் விரயங்களும் ஏற்படும். தேவை இல்லாமல் முதலீடு செய்வதோ, கடன் வாங்குவதோ கூடாது.

மனமகிழ்ச்சி:-
சனிபகவான் 5ம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் மனமகிழ்ச்சி பெருகும். பெண்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். பொருளாதாரத்தை விட மனமகிழ்ச்சி அதிகம் கிடைக்கும் காலம் இது. குழந்தைகளின் அன்பு ஆதரவும் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளிலும் பொழுது போக்கிலும் ஆர்வம் அதிகரிக்கும்.

பொதுவாக இந்த சனி பெயர்ச்சி மிதமான நன்மைகளை தரும்.

பரிகாரம்:-
சனிக்கிழமை தோறும் எள் தீபம் ஏற்றி சனி பகவானை வணங்க நன்மைகள் விளையும்.


2017 Libra Saturn Transit Predictions:
Saturn Transit Period
As the Saturn is entering 3rd place from 2nd place, on 26-1-2017, you will get some benefits. Unemployed people will get a normal job. Childless couples are blessed to have child birth. Working people will get job transfer, change in job as they desire. People in computer field and communication field will get benefits. You will get unnecessary travel from your husband/wife side. Unmarried people will get married. This is the correct time to sell house, plot and vehicle. Do not give any loan to anyone and do not be a witness or give witness signature to anyone. Your loan/debt problems will decrease. Take care in your mother’s health.

Love and unity between husband and wife will be good. You will have the blessings of god. You will have auspicious expense. You will get happiness through your children. According to your hard work, you will get benefits. You will have confusions and unnecessary travel through your siblings. You will get profit in small scale industry, commission oriented industry, advertisement business, etc. Motifs will get good opportunity.

Financial status: You will get normal growth in your financial status. You will get income according to your requirement. Some will have unnecessary travel and unnecessary expense. Unnecessarily do not invest or get loan/debt.

Personal life: As the Saturn has eye contact with 5th place, happiness in your family will increase. Women’s will get expected life. In this period you will have more happiness in personal life than financial life. You will get love and support from children. Interest in auspicious functions and entertainment will increase.

In general, this Saturn transition will give normal benefits.

Remedy: Worship Saturn by lighting lamp (el deepam) on Saturdays to get benefits.

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil