• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

விருச்சிகம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்:

பெயர்ச்சி காலம்:
விருச்சக ராசிக்கு சனிபகவான் 26-01-2017 அன்று இரவு முதல் ராசிக்குள் இருந்து இரண்டாம் வீடான தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்.

பலன்கள்:
உங்கள் ராசிக்கு இதுவரை ராசிக்குள் ஜென்ம சனியாக இருந்து, பல பிரச்சனைகளை தந்த சனிபகவான் வரும் 26-01-2017 அன்று முதல் இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் பிரச்சனைகள் சற்று குறையும். தடைப்பட்ட தனவரவுகள் வந்து சேரும். ஏழரை சனியின் கடைசி 2 ½ வருடம் என்பது ஓரளவு பிரச்சனைகள் குறைந்து நன்மைகள் ஏற்படும். மந்த நிலையில் இருந்த சொந்த தொழில் இனி சிறப்படையும். தடைபட்ட சுப காரியங்கள் இனிதே நடைபெறும். சகோதர சகோதரிகளால் நன்மைகள் ஏற்படும். வீடு, மனை, வாகனம் போன்றவற்றால் லாபம் ஏற்படும். வேலையில் உள்ளவர்கள் ஓரளவு முன்னேற்ற மடைவார்கள். சிலருக்கு வேலைமாற்றம், இடமாற்றம் அமைய வாய்ப்புண்டு.

சுய தொழில்கள், உற்பத்தி தொழில்கள், சிறு தொழில்கள், இரும்பு தொழில்கள் போன்றவை சிறப்பாக இருக்கும். அரசு விஷயங்களில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள் நன்மை அடைவார்கள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுதல் கூடாது. வீண்பேச்சை தவிர்க்கவும். வேலைக் காரர்களால் நன்மைகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவார்கள். காதல் விஷயங்களில் அடிக்கடி மனவருத்தங்கள் ஏற்படும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். தாயின் உடல் நலனில் அக்கறை காட்டவும். கலைத்துறையில் உள்ளவர்கள் ஓரளவு சிறப்பை பெறுவார்கள். சிலருக்கு எளிதாக வங்கி கடன்கள் கிடைக்கும். சொத்து பிரச்சனைகள் தீரும்.

பொருளாதாரம்:-
கடந்த 2 ½ வருடங்களை விட, இனிவரும் 2 ½ வருடங்கள் பொருளாதார வகையில் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வீடு, மனை, வாகனம் மூலம் வருமானம் கிடைக்கும். தடைப்பட்ட தனவரவு கிடைக்கும். எதையும் யோசித்து செய்து செயல்படவும்.

மனமகிழ்ச்சி:-
இரண்டாம் வீட்டில் உள்ள சனிபகவான் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். மந்த நிலையில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெறும் காலமாக இருக்கும்.

பொதுவாக கடந்த 2 ½ வருடங்களை விட இனிவரும் 2 ½ வருடங்கள் சிறப்பாக இருக்கும். ஏழரை சனி நடைபெறுவதால் கவனம் தேவை.

பரிகாரம்:-
சனிக்கிழமை தோறும் நவகிரகத்தில் உள்ள சனி பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடவும். ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து வணங்கவும்.


2017 Scorpio Saturn Transit Predictions:
Saturn Transit Period
As the Saturn is entering 2nd place on 26-1-2017, problems will decrease. You will get all the blocked income. This is the last 2 ½ years of 7 ½ years Saturn which gives less problems and more benefits. Your business will get rid of recession. You will have auspicious functions in your life. You will get benefits from your brothers and sisters. You will get profit through house, plot, vehicle etc. Working people will have normal growth. Some have chances to get transfer or change in employer/job.

Businesses like small scale industry, manufacturing, iron oriented business will be good. Attention and care are needed in government matters. Real estate people will get benefits. Do not interfere in others matter. Avoid unnecessary talks. You will get benefits through your workers/servants. Students will concentrate more on their studies. You will have sad feelings in love matters. You will get support from your parents. Take care of your mother’s health. Motifs will get normal benefits. Some will easily get bank loans. You will get rid of your asset problems.

Financial status: When compared with the last 2 ½ years, the next coming 2 ½ years will be beneficial financially. You will get good income through house, plot & vehicle. You will get blocked income (or) money. Think twice before you do anything.

Personal life: As the saturn is in the 2nd place, there will be happiness in the family. Departed husband and wife will get united. You will get happiness through your children. You will come out of recession and will become active.

When compared with the last 2 ½ years, the next coming 2 ½ years will be beneficial. As you have 7 ½ saturn attention & care are needed.

Remedy: Worship the saturn on Saturdays and give thulasi mala (garland) to hanuman.

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil