• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

தனுசு ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்:

பெயர்ச்சி காலம்:
தனுசு ராசிக்கு சனிபகவான் 26-01-2017 அன்று இரவு முதல் பன்னிரெண்டாம் வீட்டில் இருந்து சொந்த (ஒன்றாம்) வீடான தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்.

பலன்கள்:
உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் வீட்டில் இருந்து வீண் விரயங்களையும், செலவுகளையும் தந்த சனிபகவான் வரும் 26-01-2017 முதல் ராசிக்குள் அமர்வதால் பிரச்சனைகள் அதிகரிக்கும். விரைய சனியாக இருந்த சனிபகவான் இனி ஜென்ம சனியாக வருவதால் எதிலும் கவனமாக செயல்பட வேண்டும். எந்த செயலை எடுத்தாலும் அதில் தடைகள் ஏற்படும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுதல் கூடாது. யாருக்கும் கடன்களோ அல்லது ஜாமின் கையெழுத்தோ இடுதல் கூடாது.

உழைப்பிற்கேற்ப தனவரவு கிடைத்தாலும், அதை விட அதிகமான செலவுகள் ஏற்படும். உறவினர்களால் தேவை இல்லாத பிரச்சனைகள் ஏற்படும். தாயாரின் உடல் நலனில் அக்கறை செலுத்தவும். உயர்கல்வியில் தடை ஏற்படும் என்பதால் மாணவர்கள் அதிக கவனத்துடன் படிக்க வேண்டும். பொழுது போக்கு விஷயங்களில் நாட்டம் குறையும். வீட்டில் சுப காரியங்கள் செய்வதில் பல தடைகள் ஏற்படும்.

வேலையில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளை மதித்து நடக்கவும். சிலருக்கு விரும்பிய வேலை கிடைக்காமல் கஷ்டபடுவார்கள். கணவன் மனைவி அன்பு, குடும்ப ஒற்றுமை போன்றவை சுமாராக இருக்கும். குழந்தைகளால் ஓரளவு மனமகிழ்ச்சி ஏற்படும். வீண் செலவுகளையும், ஆடம்பர செலவுகளையும் குறைத்து கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. இயற்கை உணவுகளை எடுத்து கொள்ளவும். அதிகமான போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும், இறுதியில் வெற்றி கிடைக்கும். கோர்ட் வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும்.

பொருளாதாரம்:-
கடந்த 2 ½ வருடங்களை விட சற்று அதிகமான வருமானம் கிடைக்கும், அதற்கு ஏற்றவாறு செலவுகளும் இருக்கும். வேலையில் அதிக போராட்டங்கள் இருக்கும். சுயதொழில், உற்பத்தி தொழில் புரிபவர்கள் ஓரளவு நன்மை அடைவார்கள்.

மனமகிழ்ச்சி:-
ஜென்மத்தில் உள்ள சனி காரணமாக ஓரளவு மனமகிழ்ச்சி கிடைத்தாலும் அதை முழுவதும் அனுபவிக்க முடியாது. கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். குழந்தைகளால் ஓரளவு மனமகிழ்ச்சி உண்டு. பொதுவாக இந்த சனி பெயர்ச்சி குறைவான நன்மைகளையே தரும். கவனமாக செயல் படுவது நல்லது.

பரிகாரம்:-
திருநள்ளாறு சென்று நீராடி, எள் விளக்கு ஏற்றி வழிபடவும், சனிக்கிழமை தோறும் காக்கைக்கு மதிய உணவு வைத்து பின் உண்ணவும்.


2017 Sagittarius Saturn Transit Predictions:
Saturn Transit Period
As the saturn is in the 12th place, you have unnecessary expenses. As the saturn enters your zodiac on 26-1-2017, problems will increase. As the saturn is entering 1st place, attention and care are needed. You will face barriers in all your works. Do not interfere in others matter. Do not give debt/loan to others. Do not give guarantee signature to others.

You will get good income equivalent to your hard work. But your expense will be more than your income. You will get unnecessary problems from your relative side. Take care of your mother’s health. You will get barriers in your higher studies, so you need to concentrate more on your studies. Interest in entertainment will decrease. Barriers will be there in auspicious family functions.

Respect your higher officials in your job. Some will not get job as per their wish. Unity and love between husband and wife will be normal. Avoid unnecessary and luxury expenses. Attention and care are needed while travel and driving. Take natural food. You will need to face more problems. You will get success in the last stage. Court cases will get delayed.

Financial status: When compared with last 2 ½ year, you will now get more income. But you will have expenses equal to your income. You will need to face more troubles in your job. Business and manufacturing people will get normal benefits.

Personal happiness: As the saturn is in your zodiac you will get happiness. But you cannot enjoy or experience the happiness fully. Life of husband and wife will be normal. You will get some happiness from your children.

Remedy: Visit Thirunallaru temple and worship the saturn on Saturdays. Feed crow before you take your lunch on Saturdays.

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil