• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

மகரம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்:

பெயர்ச்சி காலம்:
மகர ராசிக்கு சனிபகவான் 26-01-2017 அன்று இரவு முதல் பதினோராம் வீட்டில் இருந்து பன்னிரெண்டாம் வீடான தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்.

பலன்கள்:
உங்கள் ராசிக்கு பதினோராம் வீட்டில் இருந்து நன்மைகளை தந்த ராசிநாதன் சனிபகவான் வரும் 26-01-2017 அன்று முதல் விரய ஸ்தானமான பன்னிரெண்டாம் வீட்டில் அமர்வதால் செலவுகள் அதிகரிக்கும். பொதுவாக வரவை தாண்டிய செலவுகளும், விரயங்களும், நஷ்டங்களும் ஏற்படும். ஏழரை சனியின் முதல் 2 ½ வருடங்கள் என்பதால் வாழ்க்கை சற்று கடினமாக இருக்கும். சிலருக்கு திருமணம், குழந்தை பிறப்பு, போன்றவற்றில் தடைகள் ஏற்படும். வீடு, மனை, வாகனம் போன்றவை வாங்கும் சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு வீடு கட்டும் வாய்ப்புகள் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு எதிர்பார்த்ததை விட குறைவான வேலை வாய்ப்புகள் அமையும். தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை. மேல் அதிகாரிகளை மதித்து நடக்கவும், பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

உங்கள் உடல் நலனில் அக்கறை தேவை. கணவன் மனைவி அன்பு, குடும்ப ஒற்றுமை, போன்றவை சுமாராக இருக்கும். சொந்த தொழில் மந்தமாக இருக்கும். கலைத்துறையினர் குறைவான வாய்ப்புகளை பெறுவார்கள். சிலருக்கு இரண்டாம் திருமணம் அமைய வாய்ப்புகள் ஏற்படும். பெண்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். பொதுவாக தேவையற்ற மனக்குழப்பத்தை தவிர்கவும். எடுக்கும் காரியங்களில் மந்த நிலை உண்டாகும். இனி வரும் 2 ½ வருடங்கள் கவனமாக செயல்பட வேண்டிய கால கட்டமாகும்.

பொருளாதாரம்:-
பொதுவாக வரவை தாண்டிய செலவுகளும் விரயங்களும் ஏற்படும். சொந்த தொழிலில் முதலீடு செய்யும் போது கவனமாக செய்யவும். ஒரு சிலருக்கு வேலை மாற்றம் பணி குறைப்பு ஊதிய குறைப்பு போன்றவை ஏற்படலாம். பொதுவாக பொருளாதார உயர்வு குறைவாகவே அமையும்.

மனமகிழ்ச்சி:-
பொதுவாக மந்த நிலையில் மனக்குழபங்களும் அடிக்கடி ஏற்படும். குழந்தைகளால் நிம்மதி அற்ற சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். இனி வரும் 2 ½ வருடங்கள் மனமகிழ்ச்சி குறைவாக கிடைக்கும்.

பொதுவாக இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பு கிடையாது. ஏழரை சனி ஆரம்பம் ஆவதால் கவனமாக செயல் படவும்.

பரிகாரம்:-
சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வரவும். ஒரு முறை திருநள்ளாறு சென்று நீராடி வருவது சிறப்பு.


2017 Capricorn Saturn Transit Predictions:
As the saturn enters 12th place from 11th place on 26-1-2017, your expense will increase. Your unnecessary expenses, losses will be more than your income. As this is first 2 ½ years of 7 ½ saturn, your life will be little problematic. Some will have troubles in getting married and in child birth. You will have chances to buy home, plot, vehicle etc. Some will build their own house. Unemployed people will get lower level job than they desire. Take care of your mother’s health. Respect your higher officials. You will get love and support from your parents side.

Take care of your health. Love and unity between husband and wife will be normal. Own business will be in recession. Motifs will get less opportunity. Some may have chances to get second marriage. Women will have unnecessary travel. Avoid unnecessary confusions. You will be slow in any taken tasks. Attention and care are needed in the next 2 ½ years.

Financial status: You will have more unnecessary expenses than your income. Take care while investing in your business. Some may get transfer, depromotion, decrement in salary, etc. In general financial growth will be affected.

Personal life: You will have confusions and slow activities. You will lose peace through your children. Happiness between husband and wife will be normal. For the next 2 ½ years your happiness will decrease.

In general, this saturn transition is not good for you. Attention and care are needed as this is first part of 7 ½ saturn.

Remedy: Worship the Saturn of Saturday by lighting el deepam. Visit Thirunallaru (the Saturn temple).

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil