• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

கும்பம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்:

பெயர்ச்சி காலம்:
கும்ப ராசிக்கு சனிபகவான் 26-01-2017 அன்று இரவு முதல் பத்தாம் வீட்டில் இருந்து பதினோராம் வீடான தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்.

பலன்கள்:
உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் இருந்து நன்மைகளை வழங்கிய ராசிநாதன் சனிபகவான் வரும் 26-01-2017 அன்று முதல் பதினோராம் வீடான லாப ஸ்தானதிற்கு செல்வதால் நன்மைகள் தொடரும். வெளி உலகில் உங்கள் புகழ், கெளரவம் போன்றவை சிறப்படையும். சேமிப்புகள் மூலம் திருப்தியான வாழ்க்கை சூழல் உண்டாகும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். திருமண தடைகள் விலகி சிறப்பாக திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் அமையும். சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் சென்று முடியும்.

தாய் தந்தையரின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி அன்பு, குடும்ப ஒற்றுமை, காதல் போன்றவை சிறப்பாக இருக்கும். கலைத்துறையில் உள்ளவர்கள் சிறப்பான வாய்ப்புகளை பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடன் பிறப்புகளால் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தைகளால் மனமகிழ்ச்சி கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். நினைத்த நன்மைகள் யாவும் கிடைக்கும் சனி பெயர்ச்சியாக இந்த சனி பெயர்ச்சி அமையும். சனியின் 8ம் பார்வை காரணமாக வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

பொருளாதாரம்:-
சிறப்பான பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் காலம் ஆகும். உங்களின் சேமிப்புகள் பெருகும். நினைத்த இடத்தில் இருந்து தனவரவும் பொருள் வரவும் கிடைக்கும். சொந்த தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

மனமகிழ்ச்சி:-
திருப்தியான வாழ்க்கை சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தினராலும் நண்பர்களாலும் மனமகிழ்ச்சி ஏற்படும். சனியின் 5 மற்றும் 3ம் பார்வை காரணமாக மனமகிழ்ச்சி சிறப்பாக இருக்கும். இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு நன்மையை தரும்.

பரிகாரம்:-
நவகிரக வழிபாடும் குலதெய்வ வழிபாடும் நன்மையை தரும்.


2017 Aquarius Saturn Transit Predictions:
As the Saturn entering 11th place from 10th place on 26-1-2017, benefit continues. Your fame, dignity, respect will increase in the society. You will have a satisfactory life through your savings. You will get happiness from your friends side. You will get expected income. Business people will get profit. All the problems in getting married will be solved & your marriage will get fixed. Childless people will get child birth. Love matters will bring happiness. Some people’s love will end in marriage.

You will get support from your parents. Love, unity, happiness between husband and wife will increase. Motifs will get good opportunities. Students will be good in their academic. You will get happiness from your siblings. You will get happiness through your children. You will get rid of your loans/debts. You will get everything good what you wish for. As the Saturn has eye contact with 8th place, attention and care are needed while driving.

Financial status: This is the time for good growth in your financial status. Your savings will increase. You will get income, money, things from expected things. Business will be profitable.

Personal life: You will get a satisfactory life. You will get happiness through your friends & family. As the Saturn has eye contact with 5th and 3rd places, your happiness will be good and more. This Saturn transition will give you benefits.

Remedy: Worship 9 planets and family god to get benefits.

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil