• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

2019 புத்தாண்டு ராசிபலன்:

2019 புத்தாண்டு ராசிபலன் பொதுவானவை:

2019 ம் ஆண்டு வீரமும் தைரியமும் கொண்ட செவ்வாய் தினத்தில், துலாம் ராசியில், சுவாதி நட்சத்திரத்தில் கன்னி லக்னத்தில், வளரும் திதியான தசமி திதியில், சித்த யோகத்தில் பிறக்கிறது. இந்த வருடம் சென்ற வருடம் போல் இல்லாமல் உங்களின் தைரியமான முடிவுகளால் பிரச்சனைகளை சமாளித்து வெற்றி பெறும் காலமாக அமையும். நல்ல கிரக நிலைகளில் இந்த புத்தாண்டு பிறப்பது எல்லோருக்கும் சந்தோஷம் தரும் ஆண்டாக அமையும். பலருக்கு வேலை மற்றும் தொழிலில் உள்ள தடைகள் நீங்கும், திருமண தடை மற்றும் குழந்தை பிறப்பு தடை போன்ற பிரச்சனையை அனுபவித்த பெண்களுக்கு இந்த வருடம் மங்களகரமான ஆண்டாக அமையும். இந்த வருடத்தில் வியாபாரம், ரியல் எஸ்டேட், வாகனம் போன்ற துறைகள் சிறப்பாக இருக்கும். சகோதர சகோதரிகள் வழியில் நன்மைகள் கிடைக்கும்.

மேலும் இந்த வருடம் முக்கிய கிரக பெயர்ச்சிகளான குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி போன்ற பெயர்ச்சிகள் நடக்கஉள்ளன. வருடத்தின் மத்தியில் நடக்கும் குரு பெயர்ச்சி பலரது வாழ்வில் பல மாற்றங்களை தரும். இந்த வருடம் குருபகவான் 29-03-2019 அன்று விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சஞ்சாரம் செய்கிறார், மீண்டும் குருபகவான் வக்கிர நிலையில் 23-04-2019 அன்று விருச்சக ராசிக்கே செல்கிறார். பின் 05-11-2019 அன்று முறையாக தனுசு ராசிக்கு செல்கிறார்.

07-03-2019 அன்று ராகு பகவான் மிதுன ராசிக்கும், கேதுபகவான் தனுசு ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த வருடம் சனி பெயர்ச்சி இல்லை, சனிபகவான் தொடர்ந்து தனுசு ராசியில் சஞ்சாரம் செய்வார்.

கீழே உள்ள ராசிகளை கிளிக் செய்து உங்களுக்கு உண்டான பலன்களை பரிகார விளக்கங்களுடன் தெரிந்து கொண்டு பயன்பெறவும்...


ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்

2019 Newyear Rasipalan புத்தாண்டு ராசிபலன்கள் - பரிகார விளக்கத்துடன் in Tamil