• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

மேஷம் 2019 புத்தாண்டு ராசிபலன்:

மேஷம் புத்தாண்டு ராசிபலன்கள் 2019:

மேஷம்:
பொதுவானவை:
வருடத்தின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12ம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். ஒன்பதாம்வீட்டில் உள்ள சூரியன் காரணமாக பூர்விக சொத்துகள் கிடைக்கும். புதன் மற்றும் சுக்கிரன் சிறப்பான நிலையில் உள்ளதால் சொந்த தொழில் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் வழியில் மனமகிழ்ச்சி கிடைக்கும். நான்காம் வீட்டில் உள்ள ராகு காரணமாக மனமகிழ்ச்சி, குழந்தை பிறப்பு போன்றவை குறையும். ஆனால் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளை தரும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வேலையில் உள்ளவர்கள் சிறப்பான நிலையை அடைவார்கள். ஒன்பதாம் வீட்டில் உள்ள சனி காரணமாக இதுவரை ஏற்பட்ட பிரச்சனைகள், போராட்டங்கள், வலி வேதனைகள் வீண் வழக்குகள் போன்றவை விலகி நினைத்த (அ) எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். தெய்வ அணுகிரகம் உங்களுக்கு கிடைக்கும்.பூர்வீக சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும். தடைபட்ட திருமணம், குழந்தை பிறப்பு, போன்ற சுபகாரியங்கள் ஏற்படும். இதுநாள் வரை இருந்த கடன் பிரச்சனைகள் தீரும். பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் மனமகிழ்ச்சி நிம்மதி ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய காலம். மேலும் இந்த வருடம் நிகழும் குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்றவை உங்களுக்கு என்ன பலன்களை தரும் என்பதை விரிவாக பார்போம்.

2019 மேஷ ராசி புத்தாண்டு ராசிபலன்கள் வீடியோ:


குரு பெயர்ச்சி:
எட்டாம் வீட்டில் உள்ள குரு பகவான் காரணமாக நன்மைகள் குறையும். பலருக்கு திருமண தடை குழந்தை பாக்கிய தடை போன்றவை ஏற்படும். இருப்பினும் குருபகவான் 29-03-2019 அன்று விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு அதாவது ஒன்பதாம் வீட்டிற்கு சஞ்சாரம் செய்கிறார், மீண்டும் குருபகவான் வக்கிர நிலையில் 23-04-2019 அன்று விருச்சக ராசிக்கே செல்கிறார். பின் 05-11-2019 அன்று முறையாக தனுசு ராசிக்கு செல்கிறார். எனவே வருடதின் இறுதியில் தான் நன்மைகளை வழங்குவார். வீடு மனை வாகனம், தொழில்போன்ற விசயங்களில் நன்மைகள் ஏற்படும். வழக்குகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வெளியில் உங்கள் மதிப்பு, கெளரவம் சிறப்படையும். வேலையில் உள்ளவர்கள் நன்மை பெறுவார்கள். தள்ளிப்போன திருமணம் குழந்தை பிறப்பு போன்ற சுப காரியங்கள் நடைபெறும். வெளியுலகில் உங்கள் மதிப்பு, கெளரவம் கூடும். சொந்த தொழில் சிறப்பான நிலையை அடையும். தாய் தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். கடந்த குரு பெயர்ச்சியை காட்டிலும் இந்த குரு பெயர்ச்சி மனமகிழ்ச்சியை / நன்மைகளை தரும்.

சனிப் பெயர்ச்சி:
2019 இல் சனிபெயர்ச்சி இல்லை. தனுசு ராசியில் உள்ள சனிபகவான் காரணமாக இதுவரை ஏற்பட்ட பிரச்சனைகள், போராட்டங்கள், வலி வேதனைகள் வீண் வழக்குகள் போன்றவை விலகி நினைத்த (அ) எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். தெய்வ அணுகிரகம் உங்களுக்கு கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும். சகோதர சகோதிரிகள் வழியில் மனமகிழ்ச்சி கிடைக்கும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குதல், பதவிகள் கிடைத்தல் போன்ற அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

ராகு கேது பெயர்ச்சி:
ராகுபகவான் நான்காம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு, வெளிநாடு வேலை போன்றவை சிறப்பாக இருக்கும். அந்நிய நபர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். பத்தாம் வீட்டில் உள்ள கேது பகவான் காரணமாக தொழில் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். மேலும் 07-03-2019 அன்று ராகு பகவான் மிதுன ராசிக்கும், கேதுபகவான் தனுசு ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள். அதாவது ராகு மூன்றாம் வீட்டிலும், கேது ஒன்பதாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைவார்கள். இதன் மூலம் நன்மைகள் உங்களுக்கு தொடரும்.

பொதுவாக இந்த 2019 ம் வருடம், சென்ற வருடங்களை விட மிகவும் நன்மைகள் கொண்ட வருடமாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண் : 5, 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, கருப்பு
அதிர்ஷ்ட நாள் : புதன், சனி
அதிர்ஷ்ட இரத்னம் : மரகதப் பச்சை, கருநீலக்கல்

பரிகாரம் :
சனிக்கிழமை தோறும் “ஆஞ்சநேயரை” வழிபட்டு வர நன்மை ஏற்படும். பெண்கள் மகாலக்ஷ்மியை வணங்கவும்.

கீழே உள்ள ராசிகளை கிளிக் செய்து உங்களுக்கு உண்டான பலன்களை பரிகார விளக்கங்களுடன் தெரிந்து கொண்டு பயன்பெறவும்...


ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்

2019 Newyear Rasipalan புத்தாண்டு ராசிபலன்கள் - பரிகார விளக்கத்துடன் in Tamil