• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

மிதுனம் 2019 புத்தாண்டு ராசிபலன்:

மிதுனம் புத்தாண்டு ராசிபலன்கள் 2019:

பொதுவானவை:
வருடத்தின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் வலுவாக உள்ளதால் நன்மைகள் கண்டிப்பாக உண்டு. செவ்வாய் பத்தாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் ஏற்படும். இடம், வாகனம் போன்ற விஷயங்கள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற பல நன்மைகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் உள்ள சனி காரணமாக ஓரளவு நன்மைகள் கிடைக்கும். மார்ச் மாதத்திற்கு பிறகு சூரியன் சாதகமாக உள்ளதால் தந்தை வழியில் நன்மைகள் கிடைக்கும். ஆறாம் வீட்டில் உள்ள குருபகவான் சிறப்பான பலன்களை தருவார்.வருட தொடக்கத்தில் சுக்கிரன் சந்திரன் இணைவு உங்களுக்கு பல நல்ல பலன்களை அள்ளித்தரும். மேலும் இந்த வருடம் நிகழும் ராகு கேது பெயர்ச்சி முலமாக ஓரளவு நன்மைகளை பெறுவிர்கள். இந்த வருடம் உங்களுக்கு நன்மைகளை தரும் சாதகமான வருடமாக அமையும். மேலும் இந்த வருடம் நிகழும் குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்றவை உங்களுக்கு என்ன பலன்களை தரும் என்பதை விரிவாக பார்போம்

2019 மிதுன ராசி புத்தாண்டு பலன்கள் வீடியோ:


குரு பெயர்ச்சி:
ஆறாம் வீட்டில் உள்ள குரு பகவான் நன்மைகளை தருவார். நல்ல தனவரவு கிடைக்கும். உணவு துறை, ஆடை அலங்கார துறை, கனரக துறை, ஆசிரியர் துறை போன்றவற்றில் உள்ளவர்கள் நன்மை பெறுவார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் தடைபடும். குருபகவான் 29-03-2019 அன்று விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு அதாவது ஏழாம் வீட்டிற்கு சஞ்சாரம் செய்கிறார், மீண்டும் குருபகவான் வக்கிர நிலையில் 23-04-2019 அன்று விருச்சக ராசிக்கே செல்கிறார். பின் 05-11-2019 அன்று முறையாக தனுசு ராசிக்கு செல்கிறார். ஏழாம் வீட்டில் குரு செல்லும் காலத்தில் திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுப காரியங்கள் நடைபெறும். வருட இறுதியில் நடைபெறும் குரு பெயர்ச்சி உங்களுக்கு பல நன்மைகளை செய்யும். வருட இறுதியில் நடைபெறும் இந்த குரு பெயர்ச்சி சென்ற குருபெயர்ச்சியை விட மனமகிழ்ச்சி கொண்டதாக இருக்கும்.

சனிப் பெயர்ச்சி:
2019 இல் சனிபெயர்ச்சி இல்லை. ஏழாம் வீடான தனுசு ராசியில் சனிபகவான் கண்ட சனியாக இருந்து உங்களை பாதிப்பதால் நன்மைகள் பொதுவாக குறையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைப்பட்ட திருமணங்கள் இனிதே நடைபெறும். இது நாள் வரை இருந்த நோய்கள் நீங்கி ஆரோக்கியம் சிறப்படையும். கடன் பிரச்சனைகள் சற்று குறையும். வேலை இல்லாதவர்களுக்கு எதிர்பார்த்ததை விட குறைவான வேலையே கிடைக்கும்.

ராகு கேது பெயர்ச்சி:
ராகுபகவான் இரண்டாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். அந்நிய நபர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். எட்டாம் வீட்டில் உள்ள கேது பகவான் காரணமாக நன்மைகள் குறையும். உடல் பாதிப்புகள் இருக்கும். மேலும் 07-03-2019 அன்று ராகு பகவான் மிதுன ராசிக்கும், கேதுபகவான் தனுசு ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள். அதாவது ராகு ராசியிலும் (ஜென்மத்திலும்), கேது ஏழாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைவார்கள். இதன் மூலம் நன்மைகள் உங்களுக்கு தொடரும். ராசியில் உள்ள ராகுவால் பல நன்மைகள் உண்டு, வெளிநாடு செல்ல பலருக்கு வாய்ப்பு ஏற்படும். ஏழாம் வீட்டில் உள்ள கேதுவால் உடல் நிலை சீராகும்.

பொதுவாக இந்த2019 ம் வருடம் நன்மைகளை கொண்டதாக இருக்கும். முயற்சி செய்தால் போதும் வெற்றி உங்களை தேடி வரும்...

அதிர்ஷ்ட எண் - 5, 9
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, சிவப்பு
அதிர்ஷ்ட நாள் - புதன், செவ்வாய்
அதிர்ஷ்ட ரத்னம் - மரகதம், பவளம்

பரிகாரம் :
வெள்ளிக்கிழமை தோறும் “மஹாலெஷ்மியை” வணங்கி வருதல் நலம். சனிக்கிழமை “விநாயகரை” வழிபடுதல் நற்பலன் அளிக்கும். திங்கள்கிழமை சிவபெருமான் வழிபாடு நன்மைகளை தரும்.

கீழே உள்ள ராசிகளை கிளிக் செய்து உங்களுக்கு உண்டான பலன்களை பரிகார விளக்கங்களுடன் தெரிந்து கொண்டு பயன்பெறவும்...


ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்

2019 Newyear Rasipalan புத்தாண்டு ராசிபலன்கள் - பரிகார விளக்கத்துடன் in Tamil