• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

சிம்மம் 2019 புத்தாண்டு ராசிபலன்:

சிம்மம் புத்தாண்டு ராசிபலன்கள் 2019:

பொதுவானவை:
வருட தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் சிறப்பாக உள்ளதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சிறப்பாக இருக்கும். தந்தை வழியில் நன்மைகள் கிடைக்கும். உங்கள் உடல் நிலை ஆரோக்கியம் சீராக இருக்கும். தடைபட்ட திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும். உங்கள் யோகாதிபதி செவ்வாய் வருட தொடக்கத்தில் சுமாராக உள்ளதால் நன்மைகள் சற்று குறையும். புதன் மற்றும் சுக்கிரன் வருட பாதிக்கு மேல் சிறப்பாக உள்ளதால் பொதுவாக நன்மைகள் கிடைக்கும். நான்காம் வீட்டில் உள்ள குரு பகவான் காரணமாக நினைத்த தனவரவு ஏற்படும். வருட இறுதியில் நடைபெறும் குரு பெயர்ச்சி உங்களுக்கு ஓரளவு நல்ல பலன்களை தரும். கமிஷன் துறையில் உள்ளவர்கள் நல்ல பலன்களை பெறுவார்கள். கலை துறையில் சிறப்பான வாய்ப்புகளை பெறுவார்கள். காதல் விஷயங்கள் கைகூடி திருமணத்தில் சென்று முடியும். பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக தேவை இல்லாத குழப்பங்கள் ஏற்படும். பொதுவாக இந்த வருட மத்தியில் நல்ல பலன்களை எதிர் பார்க்கலாம். மேலும் இந்த வருடம் நிகழும் குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்றவை உங்களுக்கு என்ன பலன்களை தரும் என்பதை விரிவாக பார்போம்

2019 சிம்ம ராசி புத்தாண்டு பலன்கள் வீடியோ:


குரு பெயர்ச்சி:
நான்காம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக உங்கள் செல்வாக்கு, புகழ் போன்றவை சிறப்படையும். தொழிலில் லாபம் பெருகும். கடன் பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் நன்மைகள் பெருகும். கணவன் – மனைவி வழியில் நன்மைகள் உண்டு. வெளியில் உங்கள் புகழ் உயரும். அரசியல்வாதிகள் நன்மைகளை பெறுவார்கள். வேலை இல்லாதவர்கள் நல்ல வேலை கிடைக்க பெறுவார்கள். மேலும் குருபகவான் 29-03-2019 அன்று விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு அதாவது ஒன்பதாம் வீட்டிற்கு சஞ்சாரம் செய்கிறார், மீண்டும் குருபகவான் வக்கிர நிலையில் 23-04-2019 அன்று விருச்சக ராசிக்கே செல்கிறார். பின் 05-11-2019 அன்று முறையாக தனுசு ராசிக்கு செல்கிறார். வருட இறுதியில் குழந்தை பாக்கியம், திருமணம் போன்ற சுப நிகழ்சிகள் இனிதாக நடைபெறும். மகிழ்ச்சி பெருகும் காலமாக இருக்கும்.

சனிப் பெயர்ச்சி:
2019 இல் சனிபெயர்ச்சி இல்லை. சனிபகவான் ஐந்தாம் வீட்டில் உள்ளதால் கமிஷன் சார்ந்த தொழில்களில் லாபம் ஏற்படும். வீண் விவகாரங்களில் தலையிடல் கூடாது. வழக்குகளில் சமரசமாக அல்லது விட்டுகொடுத்து செல்லும் வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு பொருளாதார உயர்வு சற்று குறையும். மாணவர்கள் அதிக அக்கறையுடன் படிக்கவும். திருமணம், குலந்தை பிறப்பு போன்ற பல சுப காரியங்கள் நடைபெறும் காலமாகும். சனிபகவான் நன்மைகளை செய்வார், கவலை வேண்டாம்...

ராகு கேது பெயர்ச்சி:
ராகுபகவான் பன்னிரெண்டாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் குறையும். செலவுகளும், விராயங்களும் உண்டு. வெளிநாடு, வெளிநாடு வேலை போன்றவை பாதிக்கும். ஆறாம் வீட்டில் உள்ள கேது பகவான் காரணமாக தொழில் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். மேலும் 07-03-2019 அன்று ராகு பகவான் மிதுன ராசிக்கும், கேதுபகவான் தனுசு ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள். அதாவது ராகு பதினோராம் வீட்டிலும், கேது ஐந்தாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைவார்கள். இதன் மூலம் நன்மைகள் உங்களுக்கு தொடரும். விராயங்கள் குறைந்து, மகிழ்ச்சி பெருகும். காதல் விஷயங்கள் சிறப்படையும். குழந்தை இல்லாதவர்களுக்கு குலந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த பெயர்ச்சி மகிழ்ச்சியை பெருகும்.

பொதுவாக இந்த 2019 ம் வருடம் பொதுவாக நன்மைகள் கொண்ட வருடமாக அமையும். வருட இறுதியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும்

அதிர்ஷ்ட எண் : 5, 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, கருப்பு
அதிர்ஷ்ட நாள் : வெள்ளி, சனி
அதிர்ஷ்ட இரத்னம் : வைரம், கருநீலக்கல்

பரிகாரம் :
“வியாழக்கிழமை” தோறும் “ஸ்ரீ பிரம்ம தேவரை” வழிபடுதல் நன்மை பயக்கும். பெண்கள் அம்மனை வணங்க நன்மைகள் கிடைக்கும். பட்டீஸ்வரம் துர்க்கை அம்மனை வணங்க நன்மைகள் பெருகும்.

கீழே உள்ள ராசிகளை கிளிக் செய்து உங்களுக்கு உண்டான பலன்களை பரிகார விளக்கங்களுடன் தெரிந்து கொண்டு பயன்பெறவும்...


ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்

2019 Newyear Rasipalan புத்தாண்டு ராசிபலன்கள் - பரிகார விளக்கத்துடன் in Tamil