• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

கன்னி 2019 புத்தாண்டு ராசிபலன்:

கன்னி புத்தாண்டு ராசிபலன்கள் 2019:

பொதுவானவை:
வருடத்தின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் நல்ல நிலையில் உள்ளதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். வருட தொடக்கதில் சூரியன் மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்களும் நல்ல நிலையில் உள்ளதால் நன்மைகளை எதிர் பார்க்கலாம். வருட தொடக்கத்தில் இரண்டாம் வீட்டில் சந்திரன் உள்ளதால் ஹஸ்த நட்சத்திர அன்பர்கள் அதிக நன்மைகளை பெறுவார்கள். மூன்றாம் வீட்டில் உள்ள குரு பகவான் காரணமாக ஓரளவு நன்மைகள் கிடைக்கும். 2019ம் ஆண்டு குரு பெயர்ச்சி மேலும் நன்மைகளை தரும்.

பதினோராம் வீட்டில் உள்ள ராகு காரணமாக நன்மைகள் அதிகரிக்கும். நான்காம் வீட்டில் உள்ள சனிபகவான் காரணமாக நன்மைகள் உண்டு. உற்பத்தி தொழில் செய்பவர்கள் நன்மை பெறுவார்கள். கணவன் மனைவி அன்பு, குடும்ப ஒற்றுமை போன்றவை மத்திமமாக இருக்கும். வருட ஆரம்பத்தை காட்டிலும் வருட இறுதியில் அதிக நன்மைகளை எதிர் பார்க்கலாம். மேலும் இந்த வருடம் நிகழும் குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்றவை உங்களுக்கு என்ன பலன்களை தரும் என்பதை விரிவாக பார்போம்

2019 கன்னி ராசி புத்தாண்டு பலன்கள் வீடியோ:


குரு பெயர்ச்சி:
மூன்றாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக எதிர்பார்த்த தனவரவு குறையும். வெளியில் உங்கள் புகழ், கெளரவம் சிறப்படையும். வேலையில் உள்ளவர்களுக்கு அலைச்சலும், குழப்பமான மனநிலையும் இருக்கும் மேலும், குருபகவான் 29-03-2019 அன்று விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு அதாவது நான்காம் வீட்டிற்கு சஞ்சாரம் செய்கிறார், மீண்டும் குருபகவான் வக்கிர நிலையில் 23-04-2019 அன்று விருச்சக ராசிக்கே செல்கிறார். பின் 05-11-2019 அன்று முறையாக தனுசு ராசிக்கு செல்கிறார். வருட இறுதியில் நான்காம் இடத்திற்கு செல்லும் குருவால் எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறையில் உள்ளவர்கள் அதிக நன்மைகளை பெறுவார்கள். மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள். தேவையற்ற குழப்பங்கள் நீங்கி ஒரு தெளிவான முடிவை எடுப்பீர்கள். வேலையில் உள்ளவர்கள் சிறப்பு பெறுவார்கள். வேலை இல்லாதவர்கள் நிலையான வேலையை பெறுவார்கள். இந்த குரு பெயர்ச்சி நன்மைகளை கண்டிப்பாக தரும்.

சனிப் பெயர்ச்சி:
2019 இல் சனிபெயர்ச்சி இல்லை. அர்த்தாஷ்டம சனியாக இனி வரும் 2 வருடங்கள் சனிபகவான் உங்களுக்கு பலன்களை வழங்குவார்.நான்காம் வீட்டில் உள்ள சனி காரணமாக குழந்தை பாக்கியம் தடைபடும். சிலருக்கு குழந்தைகளால் பிரச்சனைகள் ஏற்படும். கணவன் மனைவி அன்பு, குடும்ப ஒற்றுமை, மனமகிழ்ச்சி போன்றவற்றில் பிரச்சனைகள் ஏற்படும். குழப்பங்கள், அலைச்சல்கள், போன்றவை குறைந்து நிலையான வேலை கிடைக்கும். உற்பத்தி தொழில் செய்பவர்கள் நன்மைகளை பெறுவார்கள். சனி பகவான் பொதுவாக நன்மைகளை செய்வார்.

ராகு கேது பெயர்ச்சி:
ராகுபகவான் பதினோராம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு, வெளிநாடு வேலை போன்றவை சிறப்பாக இருக்கும். அந்நிய நபர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். ஐந்தாம் வீட்டில் உள்ள கேது பகவான் காரணமாக மகில்சி கிடைக்கும். மேலும் 07-03-2019 அன்று ராகு பகவான் மிதுன ராசிக்கும், கேதுபகவான் தனுசு ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள். அதாவது ராகு பத்தாம் வீட்டிலும், கேது நான்காம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைவார்கள். இதன் மூலம் நன்மைகள் உங்களுக்கு தொடரும். தொழில் வளர்ச்சியடையும். வீடு, வாகனம் போன்ற விஷயங்கள் சிறப்பாக இருக்கும். வேலை இல்லாதவர்கள் சிறப்பான வேலை பெறுவார்கள். சுமாரான வேலையில் உள்ளவர்கள் நல்ல வேலை பெறுவார்கள். இந்த ராகு-கேது பெயர்ச்சி சிறப்பான பலன்களை தரும்.

பொதுவாக இந்த 2019 வருடம் உங்களுக்கு நல்ல வருடமாக இருக்கும். சென்ற வருடங்களை விட பொருளாதரம் சிறப்படையும். முயற்சி செய்தால் முன்னேற்றம் கண்டிப்பாக உண்டு.

அதிர்ஷ்ட எண் : 6, 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, கருப்பு
அதிர்ஷ்ட நாள் : வெள்ளி, சனி
அதிர்ஷ்ட இரத்னம் : வைரம், கருநீலக்கல்

பரிகாரம் :
சனிக்கிழமை “சனிபகவான்” அல்லது “ஆஞ்சநேயரை” வழிபட்டு வருதல் நலம். மேலும் ஆரணி எரிக்குப்பம் எந்திரசனீஸ்வரர் வழிபாடு சிறப்பான பலன்களை தரும்.

கீழே உள்ள ராசிகளை கிளிக் செய்து உங்களுக்கு உண்டான பலன்களை பரிகார விளக்கங்களுடன் தெரிந்து கொண்டு பயன்பெறவும்...


ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்

2019 Newyear Rasipalan புத்தாண்டு ராசிபலன்கள் - பரிகார விளக்கத்துடன் in Tamil