• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

துலாம் 2019 புத்தாண்டு ராசிபலன்:

துலாம் புத்தாண்டு ராசிபலன்கள் 2019:

பொதுவானவை:
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் வருட தொடக்கத்தில் நல்ல நிலையில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். இரண்டாம் வீட்டில் குருவுடன் சேர்ந்து உள்ளதால் தனவரவு சிறப்ப்டையும். கணவன் மனைவி அன்பு, குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குழந்தைகள் வழியில் மனமகிழ்ச்சி கிடைக்கும். எதிர் பார்த்த தனவரவு கிடைக்கும். திருமணம் குழந்தை பிறப்பு போன்ற சுப காரியங்கள் நடைபெறும். பத்தாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக அந்நிய நபர்களால் நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். தொழில் சிறப்ப்டையும். பெண்கள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். கலைத்துறையினர் நல்ல வாய்ப்புகளை பெறுவார்கள்.

ராசியில் உள்ள சந்திரன் காரணமாக சிலருக்கு குழப்பமான மனநிலை ஏற்படும். மூன்றாம் வீட்டில் உள்ள புதன், சூரியன் சேர்க்கை காரணமாக நன்மைகள் விழையும். மூன்றாம் வீட்டில் உள்ள சனிபகவான் ஓரளவு நன்மைகள் செய்வார்.. வருட இறுதியில் நிகழும் ராகு கேது பெயர்ச்சி நல்ல பலன்களை தரும். மேலும் இந்த வருடம் நிகழும் குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்றவை உங்களுக்கு என்ன பலன்களை தரும் என்பதை விரிவாக பார்போம்

2019 துலாம் ராசி புத்தாண்டு பலன்கள் வீடியோ:


குரு பெயர்ச்சி:
இரண்டாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக நன்மைகள் ஏற்படும். செலவுகள் குறைந்து நிம்மதி ஏற்படும். உங்கள் தொழில் / வேலை சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் நன்மை பெறுவார்கள். மேலும் குருபகவான் 29-03-2019 அன்று விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு அதாவது மூன்றாம் வீட்டிற்கு சஞ்சாரம் செய்கிறார், மீண்டும் குருபகவான் வக்கிர நிலையில் 23-04-2019 அன்று விருச்சக ராசிக்கே செல்கிறார். பின் 05-11-2019 அன்று முறையாக தனுசு ராசிக்கு செல்கிறார். அதாவது மூன்றாம் வீட்டில் வருட இறுதியில் செல்லும் சமயம் சுமாரான பலன்கள் தான் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சி சென்ற குருபெயர்ச்சியை விட நன்மைகள் சற்று குறைவாக கொண்டதாக அமையும்.

சனிப்பெயர்ச்சி:
2019 இல் சனிபெயர்ச்சி இல்லை. மூன்றாம் வீட்டில் சனிபகவான் உள்ளதால் ஓரளவு நன்மைகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு ஓரளவு சிறப்பான வேலை கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு விரும்பிய பணிமாற்றம் இடமாற்றம் கிடைக்கும். கணிப்பொறி, தகவல் தொடர்பு துறையில் உள்ளவர்களுக்கு நன்மைகள் விளையும். கணவன் மனைவி வழியில்அலைச்சல் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஏற்படும்.

ராகு கேது பெயர்ச்சி:
ராகுபகவான் பத்தாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு, வெளிநாடு வேலை போன்றவை சிறப்பாக இருக்கும். அந்நிய நபர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். நான்காம் வீட்டில் உள்ள கேது பகவான் காரணமாக தொழில் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். மேலும் 07-03-2019 அன்று ராகு பகவான் மிதுன ராசிக்கும், கேதுபகவான் தனுசு ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள். அதாவது ராகு ஒன்பதாம் வீட்டிலும், கேது மூன்றாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைவார்கள். இதன் மூலம் நன்மைகள் உங்களுக்கு தொடரும். மனம் சார்ந்த விஷயங்கள் சிறப்பு. வீடு, மனை, வாகனம் விற்பனை சிறப்பாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் குறையும்.

பொதுவாக இந்த 2019 ம் வருடம் நன்மைகள் கொண்டதாகவும், பிற்பகுதி சுமாராகவும் இருக்கும். மூன்றாம் வீட்டில் பல கிரகங்கள் உள்ளதால் தொடர்முயற்சி செய்தால் தான் வெற்றி பெற முடியும்.

அதிர்ஷ்ட எண் : 2, 1
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
அதிர்ஷ்ட நாள் : திங்கள், ஞாயிறு
அதிர்ஷ்ட இரத்னம் : முத்து, மரகதம்

பரிகாரம்
“சனிக்கிழமை” தோறும் “சனிபகவானை” வணங்கிவருதல் மற்றும் “ஆஞ்சேநேயரை” வணங்கிவருதல் நன்மைபயக்கும். திருக்கொள்ளிக்காடு சனிபகவான் வழிபட நன்மைகள் கிடைக்கும். நரசிம்ம வழிபாடும் செய்யலாம்.

கீழே உள்ள ராசிகளை கிளிக் செய்து உங்களுக்கு உண்டான பலன்களை பரிகார விளக்கங்களுடன் தெரிந்து கொண்டு பயன்பெறவும்...


ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்

2019 Newyear Rasipalan புத்தாண்டு ராசிபலன்கள் - பரிகார விளக்கத்துடன் in Tamil