• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

விருச்சிகம் 2019 புத்தாண்டு ராசிபலன்:

விருச்சிகம் புத்தாண்டு ராசிபலன்கள் 2019:

பொதுவானவை:
உங்கள் ராசிநாதன் செவ்வாய் வருட ஆரம்பத்தில் குருவின் வீட்டில் நல்ல நிலையில் உள்ளதால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். குரு செவ்வாயின் வீட்டிலும் பரிவர்த்தனை அடைந்து உள்ளதால் நன்மைகள் கண்டிப்பாக உண்டு. குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைக்கும். ராசியில் மேலும் சுக்கிரன், புதன் போன்ற கிரகங்களும் நல்ல நிலையில் உள்ளதால் நன்மைகளை அடைவிர்கள். இரண்டாம் வீட்டில் உள்ள சனி பகவான் காரணமாக தடைபட்ட வருமானம், வேலை போன்றவை கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு சிறப்பான, எதிர்பார்த்த வேலை கிடைக்கும். தள்ளி போன குழந்தை பிறப்பு, திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும்.

ஜென்ம குரு பகவான் காரணமாக சில சோதனைகளுக்கு பிறகே நன்மைகளை தருவார்.. உங்களின் தொழில் சிறப்பான நிலையில் இருக்கும். சுயதொழில், உற்பத்தி தொழில் செய்பவர்கள் நன்மை அடைவார்கள். கலைத்துறையில் உள்ளவர்கள் நல்ல வாய்ப்புகளை பெறுவார்கள். 7 ½சனியின் இறுதி பகுதியில் நீங்கள் உள்ளதால் கவனமாக செயல் படவும். சென்ற வருடத்தை விட இந்த 2019ம் வருடம் உங்களுக்கு நன்மையாக அமையும். இரண்டாம் வீட்டில் பல கிரகங்கள் இருப்பது குடும்பம் இல்லாதவர்களுக்கு குடும்பம் அமையும் காலம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை, தொழில் இல்லாதவர்களுக்கு தொழில் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். மேலும் இந்த வருடம் நிகழும் குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்றவை உங்களுக்கு என்ன பலன்களை தரும் என்பதை விரிவாக பார்போம்

2019 விருச்சிக ராசி புத்தாண்டு பலன்கள் வீடியோ:


குரு பெயர்ச்சி:
ஜென்மத்தில் (ராசியில்) உள்ள குருபகவான் காரணமாக நன்மைகள் உண்டு. தொழில் சிறப்பான நிலையில் இருக்கும். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, கெளரவம் அதிகரிக்கும். வேலையில் உள்ளவர்கள் பதவி உயர்வு, பாராட்டு போன்ற நன்மைகளை பெறுவார்கள். மேலும் குருபகவான் 29-03-2019 அன்று விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு அதாவது இரண்டாம் வீட்டிற்கு சஞ்சாரம் செய்கிறார், மீண்டும் குருபகவான் வக்கிர நிலையில் 23-04-2019 அன்று விருச்சக ராசிக்கே செல்கிறார். பின் 05-11-2019 அன்று முறையாக தனுசு ராசிக்கு செல்கிறார். வருட இறுதியில் இரண்டாம் இடத்திற்கு செல்லும் குருவால் பல நன்மைகள் விளையும். கடந்த வருடங்களை விட சிறப்பான பலன்கள் கிடைக்கும் காலமாக இந்த பெயர்ச்சி அமையும்.

சனிப்பெயர்ச்சி:
2019 இல் சனிபெயர்ச்சி இல்லை. இரண்டாம் வீட்டில் உள்ள சனிபகவான் மூலம் நன்மைகள் கிடைக்கும். சனிபகவான் ஜென்ம சனியாக இருந்த பொது உள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகி நன்மைகள் உண்டாகும். தடைப்பட்ட தனவரவுகள் வந்து சேரும்.ஏழரைசனியின் கடைசி 2 ½வருடம் என்பது ஓரளவு பிரச்சனைகள் குறைந்து நன்மைகள் ஏற்படும். மந்த நிலையில் இருந்த சொந்த தொழில் இனி சிறப்படையும்.தடைபட்ட சுப காரியங்கள் இனிதே நடைபெறும். சகோதர சகோதரிகளால் நன்மைகள் ஏற்படும். வீடு, மனை, வாகனம் போன்றவற்றால் லாபம் ஏற்படும். பாத சனி, விரய சனி என்று சொல்லபடும் கடைசி பகுதியில் நீங்கள் உள்ளதால் இனி மெல்ல மெல்ல உங்கள் பிரச்சனைகள் குறையும்.

ராகு கேது பெயர்ச்சி:
ராகுபகவான் ஒன்பதாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு, வெளிநாடு வேலை போன்றவை சிறப்பாக இருக்கும். அந்நிய நபர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். மூன்றாம் வீட்டில் உள்ள கேது பகவான் காரணமாக அலைச்சல் இருக்கும்.. மேலும் 07-03-2019 அன்று ராகு பகவான் மிதுன ராசிக்கும், கேதுபகவான் தனுசு ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள். அதாவது ராகு எட்டாம் வீட்டிலும், கேது இரண்டாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைவார்கள். இதன் மூலம் நன்மைகள் உங்களுக்கு தொடரும். ராகுவால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும், கேதுவால் நன்மைகள் உண்டு. ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு நன்மைகளை தரும். இந்த பெயர்ச்சி உங்களுக்கு ஓரளவு நன்மை தான்.

பொதுவாக இந்த 2019ம் வருடம் நன்மைகள் அதிகம் கொண்ட நல்ல வருடமாக இருக்கும்.வருடத்தின் இறுதிபகுதி மிகவும் சிறப்பாக இருக்கும். இதுவரை கடந்து வந்த துன்பங்கள் மெல்ல குறையும்.

அதிர்ஷ்ட எண் : 5, 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சிவப்பு
அதிர்ஷ்ட நாள் : புதன், செவ்வாய்கிழமை
அதிர்ஷ்ட ரத்தினம் : மரகதம், பவளம்

பரிகாரம்
அம்பாள் வழிபாடு நன்மைகளை தரும். நரசிம்ம மூர்த்தி வழிபாடு சிறப்பான பலன்களை தரும். மேலும் ஆரணி எரிக்குப்பம் எந்திரசனீஸ்வரர் வழிபாடு சிறப்பான பலன்களை தரும்.

கீழே உள்ள ராசிகளை கிளிக் செய்து உங்களுக்கு உண்டான பலன்களை பரிகார விளக்கங்களுடன் தெரிந்து கொண்டு பயன்பெறவும்...


ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்

2019 Newyear Rasipalan புத்தாண்டு ராசிபலன்கள் - பரிகார விளக்கத்துடன் in Tamil