• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

மகரம் 2019 புத்தாண்டு ராசிபலன்:

மகரம் புத்தாண்டு ராசிபலன்கள் 2019:

பொதுவானவை:
உங்கள் ராசிநாதன் சனி பகவான் 12ம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் குறையும். ஏழரை சனியின் தாக்கம் உங்களுக்கு பல தடைகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் சில குழப்பங்கள் நிலவும். சிலருக்கு வரவை தாண்டிய செலவுகளும், பிரச்சனைகளும் அதிகரிக்கும். பதினோராம் வீட்டில் உள்ள குரு பகவான் காரணமாக ஓரளவு பிரச்சனைகளை சமாளித்து நன்மைகள் பெறலாம். மேலும் வருட இறுதியில் நிகழும் குரு பெயர்ச்சி உங்களுக்கு பிரச்சனையை தரும். புதன், சுக்கிரன் போன்ற கிரகங்கள் பன்னிரெண்டாம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் உள்ளதால் வரவை தாண்டிய செலவுகள் அதிகரிக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். சிலருக்கு வேலை மாற்றம், இட மாற்றம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பதினோராம் வீட்டில் உள்ள சுக்கிரன் காரணமாக கணவன் மனைவி அன்பு குடும்ப ஒற்றுமை போன்றவை சிறப்பாக இருக்கும். ஆறாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக சிலருக்கு சிறப்பான வேலை கிடைக்கும். வெளிநாடு வேலை, வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை அமைய வாய்ப்பு உண்டு. பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள கேது காரணமாக சொந்த ஊரை விட்டு வேலை காரணமாக வெளியூர் செல்ல நேரலாம். மேலும் இந்த வருடம் நிகழும் குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்றவை உங்களுக்கு என்ன பலன்களை தரும் என்பதை விரிவாக பார்போம்

2019 மகர ராசி புத்தாண்டு பலன்கள் வீடியோ:


குரு பெயர்ச்சி:
பதினோராம் வீட்டில் உள்ள குரு பகவான் காரணமாக நன்மைகள் ஏற்படும். தொழில் மந்த நிலையில் இருக்கும். திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுபகாரியங்கள் ஏற்படும். திருமண தடைகள் விலகி சுப காரியங்கள் நடக்கும். திருப்தியான வாழ்க்கை சூழல் அமையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மேலும் குருபகவான் 29-03-2019 அன்று விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு அதாவது பன்னிரெண்டாம் வீட்டிற்கு சஞ்சாரம் செய்கிறார், மீண்டும் குருபகவான் வக்கிர நிலையில் 23-04-2019 அன்று விருச்சக ராசிக்கே செல்கிறார். பின் 05-11-2019 அன்று முறையாக தனுசு ராசிக்கு செல்கிறார். வருட இறுதியில் பன்னிரெண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் குரு காரணமாக செலவுகள் ஏற்படும், சுப செலவுகள் / ஆடம்பர செலவுகள் உண்டு.

சனிப்பெயர்ச்சி:
2019 இல் சனிபெயர்ச்சி இல்லை. உங்கள் ராசிக்கு சனிபகவான் பன்னிரெண்டாம் வீட்டில் விரைய இடத்தில் உள்ளதால் செலவுகள் அதிகரிக்கும். பொதுவாக வரவை தாண்டிய செலவுகளும், விரயங்களும், நஷ்டங்களும் ஏற்படும்.ஏழரைசனியின் முதல் 2 ½ வருடங்கள் என்பதால் வாழ்க்கை சற்று கடினமாக இருக்கும். சிலருக்கு திருமணம், குழந்தை பிறப்பு, போன்றவற்றில் தடைகள் ஏற்படும்.வீடு, மனை, வாகனம் போன்றவை வாங்கும் சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு வீடு கட்டும் வாய்ப்புகள் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட குறைவான வேலை வாய்ப்புகள் அமையும். சனி பகவானின் தீமையில் இருந்து விடுபட இறைவழிபாடு செய்வதே வழி...

ராகு கேது பெயர்ச்சி:
ராகுபகவான் ஏழாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு, வெளிநாடு வேலை போன்றவை சிறப்பாக இருக்கும். அந்நிய நபர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். ராசியில் வீட்டில் உள்ள கேது பகவான் காரணமாக தொழில் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். மேலும் 07-03-2019 அன்று ராகு பகவான் மிதுன ராசிக்கும், கேதுபகவான் தனுசு ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள். அதாவது ராகு ஆறாம் வீட்டிலும், கேது பன்னிரெண்டாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைவார்கள். இதன் மூலம் நன்மைகள் உங்களுக்கு தொடரும். ராகு சிறப்பாக உள்ளதால் வேலைவாய்ப்புகள் சிறப்படையும்.

பொதுவாக இந்த வருடம் மிதமான நன்மைகளை கொண்ட வருடமாக இருக்கும். வருட பிற்பகுதியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
அதிர்ஷ்ட எண் : 5, 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, வெண்மை
அதிர்ஷ்ட நாள் : புதன், வெள்ளி
அதிர்ஷ்ட ரத்தினம் : மரகதப்பச்சை, வைரம்

பரிகாரம்
வெள்ளிக்கிழமை “ஸ்ரீ மகாலஷ்மியை” வணங்கிவருதல் வேண்டும். நரசிம்மர் வழிபாடு செய்வது நன்மைகளை தரும். சனிக்கிழமை தோறும் எல்தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் உண்டு.

கீழே உள்ள ராசிகளை கிளிக் செய்து உங்களுக்கு உண்டான பலன்களை பரிகார விளக்கங்களுடன் தெரிந்து கொண்டு பயன்பெறவும்...


ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்

2019 Newyear Rasipalan புத்தாண்டு ராசிபலன்கள் - பரிகார விளக்கத்துடன் in Tamil