• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்:

குருப்பெயர்ச்சி பலன்கள் 2017-2018 :

சூரிய குடும்பத்தில் உள்ள மிக பெரிய கிரகம் குரு (வியாழன்). கிரகங்களில் அதிக அளவு சுப காரகங்களை கொண்ட கிரகம் குரு என்பதால் குருவின் பெயர்ச்சி அனைவரது வாழ்க்கையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும். பணம், புகழ், அந்தஸ்து, கெளரவம், நீதி, கல்வி, குழந்தைகள், திருமணம், தொழில், பதவி போன்ற பல நல்ல விசயங்களுக்கு காரணமானவர் குருபகவான். குரு பார்த்தல் கோடி நன்மை என்பது பழமொழி. புத்திர காரகன் என்று குருவை அழைப்பதால் குழந்தை பாக்கியம் பெற குருபகவான் சிறப்பாக இருக்க வேண்டும்.

கிரகங்களிலேயே சிறப்பு பெற்ற கிரகமான குருபகவான், நிகழும் ஹேவிளம்பி வருடம் 12-09-2017அன்று காலை சுமார் 07.00 மணியளவில் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறார். துலாம் ராசியில் சுமார் ஒரு வருடம் குருபகவான் சஞ்சரிப்பார். கால புருசனுக்கு ஏழாம் வீட்டில் குருபகவான் அமர்வதால் அனைத்து இடத்திலும் பணபுழக்கம் சிறப்படையும். குடும்பத்தில் நிம்மதி நிகழும். தடைபட்ட திருமணம் போன்ற சுப நிகழ்சிகள் நடைபெறும்.இந்த குருபெயர்ச்சியின் மூலம் எந்த எந்த ராசிக்கு என்ன பலன்கள் என்பதை தெரிந்து கொள்வோம். ஜாதகத்தில் குரு சிறப்பாக இருப்பவர்கள் தீமைகளை பெற மாட்டார்கள். குருவின் தசை அல்லது புத்தி நடைபெறுபவர்களுக்கு குருபெயர்ச்சி வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். அனைத்து ராசி அன்பர்களுக்கும் இந்த குரு பெயர்ச்சி வாழ்க்கையில் நன்மையை வழங்குவதற்கு TAMIL HOROSCOPE இன் வாழ்த்துக்கள்.
கீழே உள்ள ராசிகளை கிளிக் செய்து உங்களுக்கு உண்டான பலன்களை பரிகார விளக்கங்களுடன் தெரிந்து கொண்டு பயன்பெறவும்...


2017 - 2018 Jupiter Transit Predictions:
Details about Guru Peyarchi 2017-2018:

Jupiter is the biggest planet in the solar system. In Tamil astrology the more importance is given to the Jupiter transit. As the Jupiter has good characteristics among the other planets, Jupiter transition brings many changes in everyone’s life. The characteristics / responsibilities of the Jupiter are money, fame, value, dignity, justice, education, marriage, children, business, good position, etc. if Jupiter is favorable in ones horoscope, then it will gives many benefits.

The transition of the Jupiter is on this “Heyvilambi” year, 12/09/2017, around morning 07.00 a.m. from the Virgo zodiac sign to Libra zodiac sign. The Jupiter will stay in the Libra zodiac for nearly one year. As the Jupiter enters 7th place from kaala purusha, cash flow will be good in all places / fields. There will be happiness in the family. Auspicious functions like marriage will be fixed by breaking all the obstacles. Let we know the predictions for all the zodiacs for this Jupiter transit 2017-2018. If the Jupiter is favorable and good in one’s horoscope then he / she will not get anything bad. There will be a change in life of people whose horoscope has the Jupiter Dasha or the Jupiter Bhukthi . TAMIL HOROSCOPE WEBSITE wishes you all a good luck for this Jupiter transit.

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil