• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

திருமண பொருத்தம் - கணப் பொருத்தம்:

ஜோதிட சாஸ்திரத்தில் திருமண பொருத்ததில் மூன்று வகையான கணங்கள் உள்ளன, அவை தேவ கணம், மனித கணம், ராட்சஸ கணம். அனைத்து நட்சத்திரங்களும் இந்த மூன்று கணங்களுக்குள் ஒன்றாக தான் இருக்கும், ஒருவர் மீது ஒருவர் சகிப்பு தன்மை கொள்ளவே இந்த பொருத்தும் உள்ளது, இந்த பொருத்தும் இருப்பின் மற்றவரை சகித்து கொண்டு வாழலாம், ஆக தின சண்டை, பிரச்சனைகள் வராது. கணம் என்பதை குணம் என்று எடுத்து கொள்ளுங்கள்.

1. அசுவினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகியவை தேவ கணம் கொண்ட நட்சத்திரங்கள் ஆகும்

2. பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவை மனித கணம் கொண்ட நட்சத்திரங்கள் ஆகும்.

3. கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் ஆகியவை ராட்சஸ கணம் கொண்ட நட்சத்திரங்கள் ஆகும்

ஆண் மற்றும் பெண் இருவரும் ஒரே கணம் சேர்ந்தவர்களானால், இருவருக்கும் மணம் செய்யலாம், அல்லது ஒருவர் தேவ கணம் மற்றொருவர் மனித கணம் என்றால் மணம் செய்யலாம்.

மணமகன் தேவ கணமாக இருந்து பெண் ராட்சஸ கணமாக இருந்தால் இந்த பொருத்தும் அவர்களுக்கு இல்லை, ஆனால் பெண் தேவ கணமாக இருந்து, ஆண் ராட்சஸ கணமாக இருந்தால் பொருத்தும் உண்டு. பெண்ணுக்கு ராட்சஸ கணமாக இருந்து ஆணின் நட்சத்திரம் 14 நட்சத்திரத்திற்கு பிறகு இருந்தாலும் பொருத்தம் உண்டு. இந்த பொருத்தம் இருந்தால் தான் இருவருக்கும் மண ஒற்றுமை ஏற்படும். இந்த பொருத்தம் இல்லாதவர்களுக்கு தின பொருத்தம் அவசியம் இருக்க வேண்டும்.


மற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்


Gana Porutham in tamil:
Gana porutham meaning:

A male and a female belonging to the same ganam or even if either belong to deiva ganam and other belong to manitha ganam they can get married.

Aswini, Mirugasirisham, Punarpoosam, Poosam, Hastham, Swathi, Anusham, Tiruvonam, and revathi are the stars Belonging to deiva ganam (God type ganam)

Barani, Rohini, Thiruvathirai, Pooram, Uthiram, Pooradam, Uthiraadam, Pooratththai, Uthirattathi are the stars belonging to Manusha Ganam (Human type Ganam)

karthikai, Ayilyam, Maham, Chithirai, Visagam, Kettai, Moolam, Avittam, Sathyam are the stars belongine to Ratchasa Ganam (Devil Type Ganam)

Deiva ganam x Deiva Ganam = Matching
Deiva Ganam x Manusha Ganam = Matching
Boy Deiva Ganam x Girl Ratchasa Ganam = Not Match
Boy Ratchasa Ganam x Girl Manusha (or) Deiva ganam = Matching

If the male belong to deiva ganam and the female belong to ratchasa ganam then they do not have gana porutham on the contrary if the female belong to deiva ganam and the male belong to ratchasa ganam then this match is fulfilled.

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil