• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

திருமண பொருத்தம் - யோனி பொருத்தம்:

ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு மிருகமாக கொள்ளபடுகிறது, அதன் படி இந்த பொருத்தம் கணக்கிடபடுகிறது. பகைமையல்லாத யோனி இருந்தால் பொருத்தம் உண்டு, பகைமையான மிருகங்கள் என்றால் யோனி பொருத்தம் இல்லை.

பகமையான மிருகங்கள் வந்தால் பொருத்தம் இல்லை, இல்லற சுகத்தை அடிப்படையாக கொண்ட இந்த பொருத்தம் இருந்தால் வாழ்க்கை என்றும் திகட்டாத இனிப்பாக இருக்கும். இந்த பொருத்தம் ஆண், பெண் இருவரின் தாம்பத்திய உடல் அமைப்பை பற்றியது. இந்த பொருத்தம் இருந்தால் இல்லறம் எண்ணும் தாம்பத்தியம், உடல் உறவு போன்ற சிற்றின்பங்கள் சிறப்பாக இருக்கும். இந்த பொருத்தம் இல்லையென்றால் தாம்பத்தியம் இனிக்காது என்றும் கூறுவார்.

அசுவினி - ஆண் குதிரை
பரணி - ஆண் யானை
கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி - ஆண் நாகம்
மிருகசீரிஷம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் யானை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்தரம் - எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
சுவாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுஷம் - பெண் மான்
கேட்டை - கலைமான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - மலட்டு பசு
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பாற்பசு
ரேவதி - பெண் யானை

இவற்றில், பொருத்தம் இல்லாதவை
பாம்பு x கீரி
யானை x சிங்கம்
குரங்கு x ஆடு
மான் x நாய்
எலி x பூனை
குதிரை x எருமை
பசு x புலி

மேலே உள்ளது படி இருந்தால், பொருத்தம் இல்லை. இந்த பொருத்தம் சரியாக இல்லையென்றால் இன்பங்கள் குறைவு தான்..


மற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்


Yoni porutham in tamil:
Yoni Porutham meaning:

As per this match each and every star is identified as an animal. This match is not fulfilled if there is a enemity between the yoni(animals). And for fulfillment of this match there should not be enemity between the animals(yoni) matched.

This match is looked to have an everlasting happiness in the family life of the couples getting married.

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil