• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

திருமண பொருத்தம் - மர பொருத்தம்:

ஜோதிட படி ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு மரமாக கொள்ளபடுகிறது, மனமக்களில், ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பால் மரம் அமைய வேண்டும், அப்படி பால் மரம் அமைந்தால் புத்திர பாக்கியம் உறுதி, இருவருக்கும் பால் மரம் என்றால் மிகவும் நன்று. இந்த பொருத்தத்தை விருட்ச பொருத்தம் என்றும் கூறுவார்கள்.

பால் உள்ள நட்சத்திரம்:
அசுவினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்வசு - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்ரட்டாதி - வேம்பு

பால் இல்லாத நட்சத்திரம்:
கார்த்திகை - அத்தி
ரோகிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்தரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்ராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை

ஆண், பெண் இருவருக்கும் பால் மரமாக வந்தால் புத்திர பாக்கியம் உண்டு, ஒருவருக்கு பால் மரமாகவும், ஒருவருக்கு பாலற்ற மரமாக வந்தால் பொருத்தம் மத்திமம். இருவருக்கும் பாலற்ற மரமாக வந்தால் பொருத்தம் இல்லை. இந்த பொருத்தம் முந்தைய காலத்தில் நமது முன்னோர்களால் பார்த்த மிகவும் முக்கிய பொருத்தமாகும், இது பத்து பொருத்ததில் வராமல் இருந்தாலும் அவசியம் பார்க்க வேண்டும்.


மற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்


Mara porutham in tamil:
Mara - virutcha Porutham meaning:

As per Tamil Matching Astrology each and every Star is being considered as a tree. For the couples either the male or the female should have the Pal Maram which confirms Budhira Bakkiyam. If Both Male and Female have Pal Maram then it is very good.

ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil