• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

இரண்டாம் திருமண பொருத்தம் பற்றி:

இரண்டாவது திருமணம் செய்ய தேவையான பொருத்தங்கள்:

விதவைகள் மற்றும் விவாகரதானவர்கள் மறுமணம் செய்யும் போது, அனைத்து விதிகளும் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. முதல் திருமணம் தோல்வி அடைந்தவர்களுக்கு இரண்டாவது திருமணம் என்பது இறைவன் அளித்த வரமாகும், கொடுப்பினை சிறப்பாக இருந்தால் தான் இரண்டாம் திருமணம் அமையும். கண்டிப்பாக முக்கிய பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்யவும். அடிப்படையாக குறைந்தது நான்கு பொருத்தம் அவசியம், அவை, தினம் அல்லது கணம் இவற்றில் ஒன்று , மகேந்திரம், ராசி, நாடி, மரம் இவற்றில் எதாவது ஒன்று மற்றும் யோனி, ரஜ்ஜி அவசியம் தேவை.

யோனி பொருத்தம் மிகவும் முக்கியம், ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு மிருகமாக கொள்ளபடுகிறது, அதன் படி இந்த பொருத்தம் கணக்கிடபடுகிறது. பகைமையல்லாத யோனி இருந்தால் பொருத்தம் உண்டு, பகைமையான மிருகங்கள் என்றால் யோனி பொருத்தம் இல்லை.

பகமையான மிருகங்கள் வந்தால் பொருத்தம் இல்லை, இல்லற சுகத்தை அடிப்படையாக கொண்ட இந்த பொருத்தம் இருந்தால் வாழ்க்கை என்றும் திகட்டாத இனிப்பாக இருக்கும். உத்தமமாக இல்லாமல் மத்திமமாக இருந்தால் பொருத்தம் உண்டு, அதமமாக மட்டும் இருக்க கூடாது.

ரஜ்ஜு பொருத்தம் என்பதே பொருத்தங்களில் மிகவும் முக்கிய பொருத்தம், பத்து பொருத்தத்தில் ஒன்பது பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜு இல்லை என்றால் திருமணம் செய்ய மாட்டர்கள், தயவுசெய்து இந்த பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்ய வேண்டாம்.

ஜாதகத்தில் இரண்டாம் திருமணம் அமைய ஒன்பதாம் வீடு மேலும் களத்திரகாரகன் செவ்வாய் அல்லது சுக்கிரன் சிறப்பாக இருந்தால் தான் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். முழுமையாக ஜாதகம் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது சிறப்பு.


சில முக்கிய விஷயங்கள்:

Horoscope Matching for Second Marriage (Remarriage):
It is not required to see all the matches if a widow or divorcee is getting remarried.

But the basic three matches are essential. They are 1) either one of Mahendram, Sign, nadi, maram 2) Yoni and 3) Rajji. Even if there are no Dhinam and Ganam matches it is not a problem in getting married.

Yoni match is very important. Here every star is viewed as an animal and the matches are made accordingly. If the animals of the two horoscopes being matched is without enimity then the horoscopes match. And if there is enmity between the animals matched then the horoscopes do not match.

This match is being looked to have a happy family life. If the horoscopes being matched have this yoni Porutham then the couples will have everlasting happiness in their family life. Even if there is not an excellent matching there must be at least moderate matching. But the matching must not be poor.

In Second marriage we must see ninth house, marriage planets Venus and Mars.
ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil