• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

ரிஷபம் - 2018 மே மாத ராசிபலன்கள்:

ஆறாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக அனைத்து நன்மைகளும் கிடைக்கும். குடும்பத்தில் மனமகிழ்ச்சி சற்று குறையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை அமையும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். காதல் விஷயங்கள் மூலம் பெண்களுக்கு மனமகிழ்ச்சி குறையும். மனமகிழ்ச்சியை விட பொருளாதாராம் சிறப்படையும். ஏழாம் வீட்டில் உள்ள செவ்வாய் காரணமாக நன்மைகள் பெருகும். சகோதர சகோதரிகள் வழியில் நன்மைகள்/ வருமானம் ஏற்படும். மேலும் செவ்வாய் வரும் மார்ச் 7 ம் தேதி முதல் எட்டாம் வீட்டில் சனிபகவானுடன் சேர்வதால் பெருமளவு நன்மைகள் குறையும். இடம், மனை, வாகனம் போன்றவற்றால் பிரச்சனைகள் ஏற்படும். வாகன விபத்துக்கள் ஏற்படலாம், கவனம் தேவை. உங்களின் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

பதினோராம் வீட்டில் உள்ள ராசிநாதன் சுக்கிரன் காரணமாக நன்மைகள் பெருகும். கணவன் மனைவி வழியில் மனமகிழ்ச்சி / நன்மைகள் உண்டு. வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன் மனைவி அன்பு, ஒற்றுமை போன்றவை சிறப்படையும். மாத இறுதியில் சுக்கிரன் பன்னிரெண்டாம் வீட்டில் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். ஆடம்பர அல்லது சுப செலவுகள் ஏற்படும். பதினோராம் வீட்டில் உள்ள புதன் காரணமாக நன்மைகள் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் கிடைக்கும். சொந்த தொழில் ஓரளவு சிறப்பாக இருக்கும். வேலையில் உள்ளவர்கள் நன்மைகளை பெறுவார்கள். மாணவர்கள் கவனமாக படிக்கவும்.

சூரியன் இந்த மார்ச் மாதம் 14 ம் தேதி வரை பதினோராம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் சிறப்படையும். தந்தை வழியிலும், அரசாங்க வழியிலும் ஆதரவு கிடைக்கும். அதன் பின் பன்னிரெண்டாம் வீட்டில் அமர்வதால் நன்மைகள் குறையும். அரசாங்க வேலைகளை தள்ளிபோட வேண்டாம். ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் நன்மைகள் ஒரளவு கிடைக்கும். வேலையில் நிலைப்பு தன்மை குறைவாக இருக்கும். அந்நிய நபர்கள் மூலம் குறைவான நன்மைகளே கிடைக்கும். ஒன்பதாம் வீட்டில் உள்ள கேது காரணமாக ஆன்மீக விசயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு வேலைப்பளு குறையும்.

சனி எட்டாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் பெருமளவு குறையும். சொந்த தொழில் மந்தமாக இருக்கும், வேலைக்காரர்களை நம்பி பெரிய பொறுப்புகளை தர வேண்டாம். செய்யும் வேலையில் கவனம் தேவை. பித்ரு காரியங்களை தவிர்க்காமல் இருபது நல்லது. கலைத்துறையினர் மிதமான வாய்ப்புகளை பெறுவீர்கள். பொதுவாக கிரகங்கள் சாதரணமாக உள்ளதால் இந்த மார்ச் மாதம் சுமாராக இருக்கும். பிற்பகுதியில் கவனம் தேவை.

பரிகாரம் மற்றும் வழிபாடு:
சனிக்கிழமை விநாயகர் வழிபாடும், வியாழகிழமை ஆஞ்சநேயர் வழிபாடும் உங்களுக்கு நன்மைகளை தரும்.


ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil