• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

மிதுனம் - 2018 மே மாத ராசிபலன்கள்:

ஐந்தாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக நன்மைகள் கிடைக்கும். நீங்கள் குழந்தைகள் வழியில் நன்மை அடைவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விஷயங்கள் திருமணத்தில் சென்று முடியும். ஆறாம் வீட்டில் உள்ள செவ்வாய் காரணமாக நன்மைகள் ஏற்படும். சகோதர சகோதரிகள் மூலம் நன்மைகள் / ஆதாயங்கள் ஏற்படும். இடம், மனை தொழில் செய்பவர்கள் நன்மை பெறுவார்கள். மேலும் செவ்வாய் வரும் மார்ச் 7 ம் தேதி முதல் ஏழாம் வீட்டில் வருவதால் நன்மைகள் தொடரும்

ஒன்பதாம் வீட்டில் சூரியன் உள்ளதால் நன்மைகள் ஏற்படும். தந்தை வழியில் நன்மைகள் ஏற்படும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக அமையும். மேலும் சூரியன் 14 ம் தேதிக்கு பிறகு பத்தாம் வீட்டில் அமர்வதால் எதிர்பார்த்த நன்மைகள் யாவும் கிடைக்கும். உங்களின் தொழில் சிறப்படையும். ராசிநாதன் புதன் பத்தாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் ஏற்படும். குழந்தைகளால் நன்மைகள் மற்றும் கெளரவம் ஏற்படும். எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். எடுத்த காரியங்களில் நன்மைகள் விளையும். வேலையில் உள்ளவர்கள் நன்மை அடைவார்கள். சொந்த தொழில் சிறப்பான நிலையில் இருக்கும்.

பூர்வபுன்னியாதிபதி சுக்கிரன் பத்தாம் வீட்டில் உள்ளதால் கணவன் மனைவி அன்பு, குடும்ப ஒற்றுமை சிறப்படையும். கணவன் மனைவி வழியில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மாத கடைசியில் சுக்கிரன் பதினோராம் வீட்டில் அமர்வதால் மகிழ்ச்சி நிலை தொடரும்.

ஏழாம் வீட்டில் உள்ள சனி காரணமாக நன்மைகள் கிடைக்கும். வேலைகாரர்களால் நன்மைகள் கிடைக்கும். எடுத்த காரியங்களில் பொதுவாக நன்மைகள் கிடைக்கும். எட்டாம் வீட்டில் உள்ள கேது காரணமாக நன்மைகள் சற்று குறையும். தலைசுற்றல் சிலருக்கு ஏற்படும். இரண்டாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக தனவரவு ஏற்படும். வெளிநாடு சம்மந்தப்பட்ட வேலைகளும், அந்நிய நபர்களாலும் நன்மைகள் ஏற்படும். வேலையில் உள்ளவர்கள் சிறப்படைவர். கலைத்துறையினர் நல்ல வாய்ப்புகளை பெறுவார்கள். பொதுவாக இந்த மார்ச் மாதம் நன்மைகள் கொண்ட நல்ல மாதமாக அமையும்.

பரிகாரம் மற்றும் வழிபாடு:
துர்க்கை அம்மனை வணங்க நன்மைகள் கிடைக்கும். பெருமாள் வழிபாடும் சிறப்பான பலன்களை தரும்.


ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்

2019 Newyear Rasipalan புத்தாண்டு ராசிபலன்கள் - பரிகார விளக்கத்துடன் in Tamil