• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

சிம்மம் - 2018 மே மாத ராசிபலன்கள்:

ஏழாம் வீட்டில் உள்ள ராசிநாதன் சூரியன் காரணமாக மனமகிழ்ச்சி ஏற்படும். எடுத்த காரியங்களில் தடைகளின்றி வெற்றி கிடைக்கும். தந்தை வழியிலும், அரசாங்க வகையிலும் ஆதாயங்கள் தோன்றும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். மேலும் மார்ச் 14 ம் தேதிக்கு பிறகு சூரியன் எட்டாம் வீட்டில் மறைவதால் பிரச்னைகள் தோன்றும். அரசாங்க வழியில் கவனம் தேவை. எட்டாம் வீட்டில் உள்ள புதன் காரணமாக மனமகிழ்ச்சி குறையும். குழந்தைகள் வழியில் டென்ஷன் கிடைக்கும். சொந்த தொழில் ஓரளவு சிறப்பான நிலையில் இருக்கும்.

மூன்றாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக அனைத்து நன்மைகளும் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்படையும். புதிய முயற்சிகள் மூலம் நன்மை ஏற்படும்.. வெளியில் உங்கள் புகழ் கெளரவம் உயரும். வேலையில் உள்ளவர்கள் மிதமான நன்மை பெறுவார்கள். உங்கள் யோகாதிபதி செவ்வாய் நான்காம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். சகோதர சகோதரிகள் மூலம் நன்மைகள் ஏற்படும். இடம், மனை மூலம் நன்மைகள் ஏற்படும். செவ்வாய் வரும் மார்ச் 7 ம் தேதி முதல் ஐந்தாம் வீட்டில் அமர்வதால் மனமகிழ்ச்சி தொடரும்.

எட்டாம் வீட்டில் உள்ள சுக்கிரன் காரணமாக குடும்பத்தில் மனமகிழ்ச்சி, ஒற்றுமை போன்றவை குறையும். கணவன் மனைவி வழியில் பிரச்சனைகள் / டென்ஷன் ஏற்படும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. மேலும் சுக்கிரன் வரும் மார்ச் 26 க்கு பிறகு ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் நன்மைகள் ஏற்படும். ஐந்தாம் வீட்டில் வீட்டில் உள்ள சனி பகவான் காரணமாக நன்மைகள் உண்டு, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைகாரர்களால் நன்மைகள் உண்டு. பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக ஓரளவு நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு சம்மந்தப்பட்ட விஷயங்கள் நன்மைகளை தரும். அன்னிய நபர்கள் மூலம் செலவுகள் - விரயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

பொதுவாக தொழில் சுமாரான நிலையில் இருக்கும். புதிய வேலைகள் கிடைக்கும், பணியில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் மிதமான நன்மையை அடைவார்கள். உயர் அதிகாரிகள் ஆதரவு பெற்று கொள்வது நல்லது. கலை துறையினர் புதிய வாய்ப்புகளை பெறுவர். எட்டாம் வீட்டை பல கிரகங்கள் தொடர்பு கொள்வதால் பொதுவாக நன்மைகள் குறைவாக கொண்ட மாதமாக இந்த மார்ச் மாதம் இருக்கும்.

பரிகாரம் மற்றும் வழிபாடு:
திங்கள்கிழமை தோறும் சிவபெருமானை வணங்க நன்மைகள் கிடைக்கும். காலையில் சூரிய பகவான் வழிபாடும் வேண்டும்.


ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil