• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

துலாம் - 2018 மே மாத ராசிபலன்கள்:

ஆறாம் வீட்டில் உள்ள ராசிநாதன் சுக்கிரன் காரணமாக அனைத்து நன்மைகளும் கிடைக்கும். குடும்பத்தில் மனமகிழ்ச்சி, ஒற்றுமை குறையும். கணவன் மனைவி வழியில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உள்ளவர்கள் அதிக நன்மைகளை பெறுவார்கள். உங்கள் யோகாதிபதி புதன் ஆறாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கண்டிப்பாக உண்டு. குழந்தைகள் மூலம் நன்மைகள் விளையும். கணிபொறி, தகவல் தொடர்பு துறையில் உள்ளவர்கள் நன்மைகள் பெறுவார்கள். ஐந்தாம் வீட்டில் உள்ள சூரியன் காரணமாக நன்மைகள் / மனமகிழ்ச்சி பெருகும். மார்ச் 14 ம் தேதிக்கு பிறகு ஆறாம் வீட்டில் வருவதால் அரசு மற்றும் தந்தை வழியில் ஆதாயம் பெருகும். தந்தை வழியில் நன்மைகள் உண்டு. ராகு பத்தாம் வீட்டில் உள்ளதால் அந்நிய நபர்களிடம் இருந்து நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு வேலைக்கு செல்லும் வாய்ப்புகள் பெருகும். வெளிநாட்டு நிறுவனங்களில் பொறுப்பான வேலை கிடைக்கும்.

ராசியில் உள்ள ஜென்மகுரு காரணமாக பொதுவாக நன்மைகள் தந்தாலும் சில தடைகளையும் ஏற்படுத்துவார். குழந்தை பிறப்பு, திருமணம் போன்ற அகம் சார்ந்த விஷயங்கள் சிறப்பாக அமையும். வேலை சம்மந்தப்பட்ட விஷயங்கள் சுமாராக இருக்கும். செவ்வாய் இரண்டாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் ஏற்படும். வீடு, இடம் மனை போன்றவற்றால் நன்மைகள் ஏற்படும். மேலும் செவ்வாய் வரும் மார்ச் 7 ம் தேதிக்கு மேல் மூன்றாம் வீடு செல்வதால் சகோதர சகோதரிகளால் சற்று அலைச்சல் ஏற்படும். கேது நான்காம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் ஏற்படும். சனி மூன்றாம் வீட்டில் உள்ளதால் ஓரளவு நன்மைகள் ஏற்படும். சிலருக்கு வேலைக் காரணமாக அலைச்சல் ஏற்படும்.

தொழிலில் லாபம் பெருகும், வேலைக்கு செல்பவர்கள் அதிக நன்மைகளை பெறுவீர்கள். உயர் அதிகாரிகளால் பாராட்டு கிடைக்கும்வழக்குகளில் வெற்றி உண்டாகும்.. கலைத்துறையினர் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். ஐந்தாம் வீட்டை பல கிரகங்கள் தொடர்பு கொள்வதால் நன்மைகள் தோன்றும். பொதுவாக கிரகங்கள் சாதகமாக உள்ளதால் நன்மைகள் கொண்ட மாதமாக இந்த மார்ச் மாதம் அமையும்.

பரிகாரம் மற்றும் வழிபாடு:
புதன்கிழமை தோறும் விஷ்ணுவை வணங்க நன்மைகள் கிடைக்கும். செவ்வாய் தோறும் முருகபெருமான் வழிபாடும் சிறந்தது.


ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்

2019 Newyear Rasipalan புத்தாண்டு ராசிபலன்கள் - பரிகார விளக்கத்துடன் in Tamil