• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

மகரம் - 2018 மே மாத ராசிபலன்கள்:

இரண்டாம் வீட்டில் உள்ள சூரியன் காரணமாக எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். அரசாங்க மற்றும் தந்தை வழியில் நன்மைகள் ஏற்படும். மேலும் சூரியன் வரும் மார்ச் 14 ம் தேதி முதல் மூன்றாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் சற்று குறையும். சுக்கிரன் மூன்றாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் சற்று குறையும். குடும்பத்தில் மனமகிழ்ச்சி, கணவன் மனைவி அன்பு ஒற்றுமை சிறப்படையும். பெண்களுக்கு சில குழப்பங்கள் ஏற்படும். மேலும் சுக்கிரன் மார்ச் 26 ம் தேதி முதல் நான்காம் வீட்டில் வருவதால் பொருளாதார நன்மைகள் ஏற்படும்.

பதினோராம் வீட்டில் உள்ள செவ்வாய் காரணமாக அனைத்து நன்மைகளும் கிடைக்கும். வீடு, மனை மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். சகோதர சகோதரிகள் வழியில் நன்மைகள் வந்து சேரும். மேலும் செவ்வாய் வரும் 7 ம் தேதி முதல் பன்னிரெண்டாம் வீட்டில் அமர்வதால் நன்மைகள் குறைந்து செலவுகள் ஏற்படும். பத்தாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக அனைத்து நன்மைகளும் கிடைக்கும். எதிர்பார்த்த வேலை அல்லது பதவிகள் பதவி உயர்வு போன்ற நன்மைகள் கிடைக்கும். தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடைபெறும்.. மூன்றாம் வீட்டில் உள்ள புதன் காரணமாக நன்மைகள் குறைந்து அலைச்சல் ஏற்படும். குழந்தைகள் வழியில் நிம்மதி குறையும். வேலையில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை மதித்து நடக்கவும். ராசியில் உள்ள உள்ள கேது காரணமாக அவ்வபோது தலைசுற்றல், மயக்கம் இருக்கும். ஏழாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக நன்மைகள் உண்டு. அந்நிய நபர்களிடம் நன்மைகளை எதிர்பார்க்கலாம்..

உங்கள் ராசிநாதன் சனி பன்னிரெண்டாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் குறையும். நன்மைகளை பெற அதிகம் உழைக்க / போராட வேண்டிவரும். ஏழரை சனி ஆரம்பம் என்பதால் எந்த செயலையும் கவனமாக செய்யவும். முன் கோபம் வேண்டாம். வேலைக்கு செல்பவர்கள் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. சிலருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிக கிரகங்கள் மூன்றாம் வீட்டை தொடர்பு கொள்வதால் அலைச்சல் இருக்கும். பொதுவாக கிரகங்கள் சுமாராக உள்ளதால் இந்த மார்ச் மாதம் நன்மைகள் குறைவாக கொண்ட மாதமாக அமையும்.

பரிகாரம் மற்றும் வழிபாடு:
மதுரை சொக்கனாதரை வணங்க நன்மைகள் கிடைக்கும். சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் உண்டாகும். தொழில் சிறக்க எந்திர சனீஸ்வர பகவானை வணங்கவும்...


ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil