• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

கும்பம் - 2018 மே மாத ராசிபலன்கள்:

ஒன்பதாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக அனைத்து நன்மைகளும் கிடைக்கும். தள்ளிப்போன குழந்தை பிறப்பு, திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும். வெளியில் உங்கள் புகழ், கெளரவம் போன்றவை உயரும். வேலையில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் தீரும். கேது பன்னிரெண்டாம் வீட்டில் உள்ளதால் ஓரளவு நன்மைகள் கிடைக்கும். அவ்வபோது மயக்கம், குழப்பம் ஏற்படும். ராகு ஆறாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் அதிகரிக்கும். அந்நிய நபர்கள் மூலம் நன்மைகள் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை ஏற்படும்.

செவ்வாய் பத்தாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் ஏற்படும். வீடு மனை போன்றவற்றில் நன்மைகள் பெருகும். சகோதர வழியில் லாபம் கிடைக்கும். மேலும் செவ்வாய் வரும் மார்ச் 7ம் தேதி முதல் பதினோராம் வீடு சென்று அமர்வதால் செலவுகள் குறைந்து நன்மைகள் ஏற்படும். உங்கள் பூர்வபுன்னியாதிபதி புதன் இரண்டாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் உண்டு. குழந்தைகளால் கெளரவம் ஏற்படும். வேலையில் உள்ளவர்கள் நன்மைகளை பெறுவார்கள். தகவல் தொடர்பு துறை, கணிபொறி துறையில் உள்ளவர்கள் அதிக நன்மைகளை பெறுவார்கள்.

ராசிக்குள் உள்ள சூரியன் காரணமாக நன்மைகள் உண்டு. மேலும் சூரியன் மார்ச் 14 ம் தேதிக்கு பிறகு இரண்டாம் வீட்டில் அமர்வதால் எதிர்பார்த்த தனவரவு ஏற்படும். தந்தை வழியில் நன்மைகள் ஏற்படும். அரசாங்க விஷயங்கள் உங்களுக்கு ஆதரவாக அமையும். சுக்கிரன் இரண்டாம் வீட்டில் உள்ளதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, குடும்ப ஒற்றுமை, அன்பு போன்றவை மிதமாக இருக்கும். கணவன் மனைவி வழியில் நன்மைகள் / தனவரவு கிடைக்கும். மேலும் சுக்கிரன் வரும் மார்ச் 26ம் தேதி முதல் மூன்றாம் வீடு சென்று அமர்வதால் கணவன் மனைவி அன்பு, குடும்ப ஒற்றுமை போன்றவை சுமாராக இருக்கும். சிலருக்கு அலைச்சல் ஏற்படும். சனி பதினோராம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் பெறுவீர்கள். வேலைக்காரர்கள் வழியில் நன்மைகள் ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த நன்மைகள் அனைத்தும் கிடைக்கும். இரண்டாம் வீட்டை சில கிரகங்கள் தொடர்பு கொள்வதால் தொழிலில் நன்மைகள் ஏற்படும்.

தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல பல முயற்சிகளால் வெற்றி உண்டு. லாபம் பெருகும். வேலைக்கு செல்பவர்கள் நன்மைகள் பெறுவீர்கள். பதவிகள் தேடி வரும். கெளரவம் கிடைக்கும். கலைத்துறையினர் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். பொதுவாக இந்த மார்ச் மாதம் மிகவும் நன்மையான மாதமாக அமையும்.

பரிகாரம் மற்றும் வழிபாடு:
தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் கிடைக்கும். திங்கள் தோறும் சிவபெருமானை வணங்க நன்மைகள் உண்டு.


ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil