• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

மீனம் - 2018 மே மாத ராசிபலன்கள்:

உங்கள் யோகாதிபதியான செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். சகோதர சகோதரிகள் வழியில் மனமகிழ்ச்சி உண்டாகும். மேலும் செவ்வாய் வரும் மார்ச் 7 ம் தேதி முதல் பத்தாம் வீடு சென்று அமர்வதால் நன்மைகள் அதிகரிக்கும். வேலையில் உள்ளவர்கள் அதிக நன்மைகளை பெறுவார்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் உண்டு. எட்டாம் வீட்டில் உள்ள அஷ்டம குரு பகவான் காரணமாக எடுத்த காரியங்களில் நன்மைகள் குறையும். வேலையில் உள்ளவர்கள் மிதமான நன்மைகளை அடைவார்கள். திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுப காரியங்கள் தள்ளிபோகும்.

பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள சூரியன் காரணமாக நன்மைகள் குறைந்து செலவுகள் அதிகரிக்கும். அரசாங்க விஷயங்கள் ஆதரவாக அமையாது. தந்தை வழியில் செலவுகள் / விரயங்கள் ஏற்படும். மேலும் சூரியன் மார்ச் 14 ம் தேதி முதல் ராசிக்குள் வருவதால் செலவுகள் குறைந்து நிம்மதி திரும்பும். ராசிக்குள் வீட்டில் உள்ள புதன் காரணமாக நன்மைகள் ஏற்படும். குழந்தைகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். வேலையில் உள்ளவர்கள் நன்மை பெறுவார்கள். சொந்த தொழில் சிறப்பான நிலையில் இருக்கும். உங்களின் வருமானம் சிறப்படையும்.

ராசிக்குள் வீட்டில் உள்ள சுக்கிரன் காரணமாக நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி, அன்பு போன்றவை சிறப்படையும். கணவன் மனைவி வழியில் மனமகிழ்ச்சி பெருகும். மேலும் சுக்கிரன் வரும் மார்ச் 26 ம் தேதி முதல் இரண்டாம் வீடு சென்று அமர்வதால் கணவன் மனைவி வழியில் நன்மைகள் ஏற்படும். பத்தாம் வீட்டில் சனி உள்ளதால் நன்மைகள் கிடைக்கும் வீடு மனை வாகனம் மூலம் நன்மைகள் கிடைக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். ராகு ஐந்தாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் உண்டு. அந்நிய நபர்களால் மகிழ்ச்சி ஏற்படும். வெளிநாடு சம்மந்தப்பட்ட வேலைகள் அமையும். பதினோராம் வீட்டில் உள்ள கேது காரணமாக உடல்நிலை சிறப்பாக இருக்கும். ஆன்மிகம் சம்மந்தப்பட்ட தொழில் நன்றாக இருக்கும். வேலையில் உள்ளவர்கள் நன்மை அடைவீர், உங்கள் மதிப்பு உயரும். ராசியை பல கிரகங்கள் தொடர்பு கொள்வதால் நன்மைகள் ஏற்படும். பொதுவாக நன்மைகளை கொண்ட மாதமாக இந்த மார்ச் மாதம் அமையும்.

பரிகாரம் மற்றும் வழிபாடு:
வியாழகிழமை தோறும் குருபகவான் வழிபாடு சிறந்தது. சித்தர்களின் வழிபாடும், மகான்களின் வழிபாடும் சிறப்பை தரும்.


ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்

2019 Newyear Rasipalan புத்தாண்டு ராசிபலன்கள் - பரிகார விளக்கத்துடன் in Tamil