• Welcome to free tamil astrology website - www.tamilhoroscope.in
  • No.1 Astrology Website in Tamil Language
  • ராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...

விருச்சகம் - 2018 மே மாத ராசிபலன்கள்:

ஐந்தாம் வீட்டில் உள்ள சுக்கிரன் காரணமாக நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் அன்பு மற்றும் ஒற்றுமை, கணவன் மனைவி ஒற்றுமை, மகிழ்ச்சி போன்றவை சிறப்படையும். கமிசன் மற்றும் கலை தொழில் சிறப்பான நிலையில் இருக்கும். மேலும் சுக்கிரன் மாத இறுதியில் ஆறாம் வீடு செல்வதால் மிதமான மனமகிழ்ச்சியும், பொருளாதார நன்மைகளும் கிடைக்கும். ஐந்தாம் வீட்டில் உள்ள சூரியபகவான் காரணமாக நன்மைகள் ஏற்படும். தந்தை வழியில் மனமகிழ்ச்சி தோன்றும். அரசாங்க ஆதாயம் உங்களுக்கு உண்டு. மேலும் சூரியன் மார்ச் 14 ம் தேதிக்கு பிறகு ஆறாம் வீடு செல்வதால் எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும்.

ராசிநாதன் செவ்வாய் ராசிக்குள் உள்ளதால் நன்மைகள் ஏற்படும். வீடு, மனை மூலம் லாபம் ஏற்படும். நீங்கள் தைரியமாக கானபடுவீர்கள். மேலும் செவ்வாய் வரும் மார்ச் 7 ம் தேதிக்கு பிறகு இரண்டாம் வீட்டில் அமர்வதால் தடைபட்ட வருமானம் கிடைக்கும். சகோதர சகோதரிகள் வழியில் பொருளாதார நன்மைகள் ஏற்படும். ஐந்தாம் வீட்டில் உள்ள புதன் காரணமாக நன்மைகள் ஏற்படும். குழந்தைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் யோசித்து எடுக்கும் முடிவுகளால் நன்மை ஏற்படும். கேது மூன்றாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் உண்டு. சனி இரண்டாம் வீட்டில் உள்ளதால் வருமானம் அதிகரிக்கும். ஏழரை சனி நடைபெறுவதால் கவனம் தேவை. யாரையும் நம்பி பெரிய பொறுப்புகளை தர வேண்டாம். பொறுமை உங்களை காக்கும். ஒன்பதாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக அந்நிய நபர்களால் நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும்.

பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள குரு பகவான் உள்ளதால் நன்மைகள் சற்று குறையும். பொருளாதார முன்னேற்றம் பாதிக்கும். அதிக கிரகங்கள் ஐந்தாம் வீட்டை தொடர்பு கொள்வதால் நன்மைகள் ஏற்படும். கலைத்துறையினர் ஓரளவு நல்ல வாய்ப்புகளை பெறுவார். பொதுவாக இந்த மார்ச் மாதம் மிதமான நன்மைகள் கொண்ட மாதமாக இருக்கும்.

பரிகாரம் மற்றும் வழிபாடு:
துர்கை அம்மனை வணங்கவும் நன்மைகள் கிடைக்கும். சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு தீபம் ஏற்றி வணங்கவும்.


ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்
Best Astrology Website for Marriage Matching & Rasipalan in Tamil